ஆகஸ்ட் 13, 2013

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நிகழ்த்திய ஆய்வரங்கில்




28.07.2013 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் யாழ் தமிழ்ச்சங்கம் நிகழ்த்திய தமிழ்த்தூது தனிநாயம் அடிகள் நூற்றாண்டுப் பெருவிழாவில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றினேன். "முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புகள் - ஓர் ஆய்வு" http://www.kathiyaalkal.blogspot.com/2013/07/blog-post_9298.html என்ற பெருளிலான கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றினேன். 4 அமர்வுகளாக நிகழ்வு இடம்பெற்றது. இலக்கியம் என்ற அமர்வுக்கு யாழ் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி த. கலாமணி அவர்கள் தலைமை தாங்கினார்.

என்னுடன் அரங்கில் பங்குகொண்டவர்களின் படங்கள்.











ஜூலை 22, 2013

41 வது இலக்கியச் சந்திப்பின்போது

41 வது இலக்கியச் சந்திப்பின்போது....

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 41 வது இலக்கியச் சந்திப்பின்போது (20,21 யூலை 2013) இலக்கியம் தொடர்பிலான நண்பர்களைச் சந்திக்கமுடிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அது தொடர்பான சில ஒளிப்படங்கள்







ஜூலை 10, 2013

முதற்பயணம் - தென்கிழக்குப் பல்கலைக்கழக சர்வதேச ஆய்வுமாநாடு 2013

ஒலுவிலில் அமைந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகம் 2013 யூலை மாதம் 6 மற்றும் 7 ஆகிய நாள்களில் சர்வதேச ஆய்வு மாநாடு ஒன்றினை நடாத்தியது. அதில் பங்குகொண்டு உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. "ஷோபாசக்தியின் நாவல்கள்" குறித்து கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றினேன். நிகழ்வில் இருந்து சில படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


ஜூன் 16, 2013

மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள் - இணையத்தில் வாசிக்கலாம்.



துவாரகனின் "மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்" என்ற கவிதைநூலை நூலகம் இணையத்திலிருந்து முழுவதுமாக வாசிக்கமுடியும்.
http://noolaham.net/project/88/8708/8708.pdf

ஏப்ரல் 27, 2013

நன்றி - வசந்தம் - 'தூவானம்'




வசந்தம் தூவானம் நிகழ்ச்சியில் இன்று சனிக்கிழமை காலை (27.04.2013) எனது 'வல்லைவெளி'வலைப்பதிவு பற்றிய அறிமுகம் இடம்பெற்றதாக அறிந்தேன். அதற்குக் காரணமாக இருந்த நண்பர்களுக்கும் வசந்தம் தொலைக்காட்சிக்கும் எனது நன்றியைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.
- துவாரகன்