அக்டோபர் 02, 2012

வாழ்வோம் - பாடல்


பாடல் வரிகள்   - துவாரகன்
இசை                     - கந்தப்பு ஜெயந்தன்
பாடியவர்             - ரெஜிகுமார்



ஆகஸ்ட் 13, 2012

என்னுடைய பழைய கவிதையொன்று



என்னுடைய பழைய கவிதையொன்று பல நண்பர்களால் பார்வையிடப்பட்டது மகிழ்ச்சியைத் தருகிறது. அதை சுற்றில் விட்ட யாழ் இலக்கியக் குவியத்துக்கு நன்றி.

கவிதை இதுதான்

வெள்ளெலிகளுடன் வாழ்தல்

- துவாரகன் 


நாயுருவியும் ஆமணக்கும்
சடைத்து நின்ற
பற்றை மண்மேட்டில் வாழும்
வெள்ளெலியை ஒருமுறை சந்தித்தேன்

எனக்குப் பிடித்த
இரத்தநிற நாகதாளிப் பழத்தை
மூள் நீக்கி,
நட்சத்திரக் கொட்டை நீக்கி
சாப்பிட்ட நேரம்
அந்த வெள்ளெலி என்னை
தன் வளைக்கு அழைத்துச் சென்றது.
நானும் ஓர் எலியாகிச் சென்றேன்.

அழகான வளைகள்.
சேமித்த தானியங்கள்.
புசிப்பதற்கு கொட்டைகள் கிழங்குகள்.
கூடிக்குலாவ பெட்டை எலிகள்.
ஒரு சோலியும் இல்லை.
எனக்கும்கூட
புல்லாந்திப் பழம், கோரைக்கிழங்கு
கோவைப்பழம், நன்னாரி வேர்
எல்லாமே பிடிக்கும்.
வசதியென்றால்
பக்கத்துத் தோட்டங்களில்,
மரவள்ளிக் கிழங்குகள் தோண்டியும்
தின்னலாம் வா என்றது.
மனிதர்களும் பாம்புகளும் வந்தால்
ஒளிந்திருக்க வேறு வளைகளும்
உண்டென்று கூறியது.

நான் இனி,
வெளியில் வாழ்வதைவிட
வெள்ளெலிகளுடன் வாழப் போகிறேன்

பழங்கள்.
கொட்டைகள்.
கிழங்குகள்
வளைகள்
வெள்ளெலிகள்.
எல்லாமே எனக்கு
பிடித்துப் போயிற்று
---

இந்தக் கவிதையைப் பார்வையிட்டு விருப்பம் தெரிவித்த நண்பர்கள்.

• Briyanthy Arumaithurai great
Saturday at 00:08 • UnlikeLike • 1

இடுகாட்டான் இதயமுள்ளவன் மனிதம் இழந்தகாலத்தில் இந்த வாழ்தல் தேவையானதே ....... நல்ல குறியீடு வெள்ளெலி ..
Saturday at 04:45 • UnlikeLike • 1

Pirainila Krish maarupadda sinthanai
Saturday at 07:12 • UnlikeLike • 2

ஆதி பார்த்தீபன் alakiya kavithai anna
Saturday at 07:47 • UnlikeLike • 1

Senthil Raj really nice.
rempa pidichchirukku.
naanum varan.
Yesterday at 02:09 • UnlikeLike • 2


Subramaniam Kuneswaran ‎'வெள்ளெலிகளுடன் வாழ்தல்' என்ற இந்தக்கவிதை 2006 ஆம் ஆண்டு எழுதப்பட்டு அதே ஆண்டு 'உயிர்நிழல்' சஞ்சிகையில் வெளிவந்தது. அந்தக்கால அரசியற்சூழ்நிலையில் சாதாரண மனிதர்கள் ஒவ்வொருவரும் இப்படி எலியாக இருக்கலாமா என்றுதான் யோசித்திருப்பார்கள். இலக்கியக்குவியம் தனது விருப்பத்தின்பேரில் இந்தக் கவிதையை நண்பர்கள் சுற்றோட்டத்தில் விட்டுள்ளது. நன்றி இலக்கியக்குவியம். நன்றி நண்பர்களே.
Yesterday at 07:17 • LikeUnlike • 4


Subramaniam Kuneswaran இந்தக்கவிதையில் வருகின்ற 'பல்லாந்திப்பழம்' என்பது பிழை. 'புல்லாந்திப்பழம்' என்பதே சரி.
Yesterday at 07:32 • Edited • LikeUnlike • 3

• இடுகாட்டான் இதயமுள்ளவன்
• Works at என்ர சோற்றுக்கு நான் உழைக்கிறேன் அதை ஏன் உனக்கு சொல்லணும் ?

Friends
Mathusha Mathangi
• J/Vigneswara College

Friends
Siva Mathivathany
• Student at London metropolitan college

Friends
கிரி ஷாந்
• Jaffna Hindu College

Friends
Pirainila Krish
• IDM Affilated University College

Friends
Ks Sivakumaran
• University of Peradeniya

Friends
Power Ful Brain
• Works at Not Yet Working Iam Still Studing

Friends
Amalraj Francis
• Works at International Committee of the Red Cross

Friends
Ravindran Pa
• Book eating places

Friends
தாட்சாயணி- பிரேமினி சபாரத்தினம்
• Assistant Divisional Secretary at Divisional Secretariat,Kopay

Friends
Ahm Nawas
• University of Peradeniya

Friend request sent
Raj Rajeeraj
• Mannar, Sri Lanka

Friend request sent
Vetha ELangathilakam
• Pædagog at In Århus amt

Friend request sent
Briyanthy Arumaithurai

Friend request sent
Sathees Radnasingam

Friend request sent
Asan Bes
• Sengunthar Arts and Science College

Friend request sent
ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
• IT Support at Al Hokair Group

Friend request sent
Sivagnanabanu Thushanth
• Jaffna Town, Sri Lanka

Friend request sent
Rajakavi Rahil
• Works at Writer/Poet

Friend request sent
Ganu Thavarajah
• Jaffna Hindu College

Friend request sent
Saravanan Gunanayagam
• Jaffna

Friend request sent
Beaulah Ashika

Friend request sent
Senthil Raj
• Jaffna Hindu College

Princess Rose
• Works at Personal Secretary

Friend request sent
Kanesamoorthy Thanusanth
• University of Jaffna, Sri Lanka

Friend request sent
ஜெயகாந்தி குணதீபன்

Friend request sent
Amutha Porkodi
• University of Madras, Chennai

Friend request sent
Saravana Kirubalini
• J gnanasariyar college jaffna

Friend request sent
Kumar Jeya
• Graphic Designer at Printing

Friend request sent
Theeba Gowri
• Administrative Assistant at Max multimedia system

Friend request sent
Yayini Lingam
• College

Respond to friend request
Friends
Sanjay Nanthakumar
• The Open University of Sri Lanka

Friend request sent
Maithily Arul
• Works at Metroland Media Group

Friend request sent
Seelan Sathya
• Dharmaraja College, Kandy, Sri Lanka

Friend request sent
Kalai Vani Duraivel
• Auxilium girls high school

Friend request sent
Lisiyas Lisi
• St.Xavier's Boys' National School

Friend request sent
Ganesan Pillai
• GMC(MEN) KUMBAKONAM

Friend request sent
Kavaas Kanthasamy
• JHC


ஆகஸ்ட் 12, 2012

என்னைப் பற்றி - சி. ரமேஸ்



 எட்டு ஈழக்கவிகளின் தொகுப்பாக ஆழி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட "மரணத்தில் துளிர்க்கும் கனவு" என்ற  நூலுக்கு சி. ரமேஸ் எழுதிய மதிப்பீட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

"ஈழத்து சமகால வாழ்வியலை நுண் அரசியலோடு இணைத்து இயல்பான மொழியில் கவிதைகளுக்கூடாக மென் அதிர்வுகளை ஏற்படுத்தியவர் துவாரகன் ஆவார்.சிக்கலில்லாத வாழ்வின் அர்த்தங்களைத் தேடும் இவரது கவிதைமொழி வாழ்வின் அனுபவங்களுக்கூடாகக் கட்டுருபவை.அன்றாட வாழ்வில் எதிர்நோக்கும் வாழ்வின் அபத்தங்களை எழும் வலிகளை எளிமையாகவும் நேர்த்தியாகவும் அங்கதமாகவும் வெளிப்படுத்தும் துவாரகன் கவிதைகள் சமகால நிகழ்வின் பதிவுகள்.

குழந்தைகள் முதல் முதியோர் வரை யாவரையும் குருதியுமிலும் கோரப்பற்களுடன் காவு கொள்ளும் மரணம், எம் தேசத்தில் தெருவோரங்களிலும் வெளிகளிலும் பதுங்கியுள்ளது. பிணம் தின்னும் கழுகு போல் காத்துக் கிடக்கும் மரணத்தை எவ்வித பிசிரலுமின்றி ‘ஒரு மரணம் சகுனம் பார்க்கிறது’ என்னும்  இவரின் கவிதை தத்துருபமாகப் பதிவு செய்கிறது.

“நடந்து செல்லும் வயல் வரம்புகளில்
படுத்திருக்கும் பாம்புகள் போல்
வீதிகளின் வெளியெங்கும்
பதுங்கியிருக்கிறது மரணம் 

கலகலப்பான மழலைக் குரல்களையும் 
தம் நீண்ட பிரிவின் பின்னான 
உறவுகளையும்
தம் கடமை முடிக்க விரையும் 
எல்லோரையும் தோற்கடித்து 
வெடித்துச் சிதறடிக்கும் 
ஒரு வெடிகுண்டைப் போல் 
காத்திருக்கிறது மரணம்”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -78)


இராணுவ அரண்களுக்கு அருகாமையில் நாம் செல்லும் போது மீண்டும் மீண்டும் எம்மை நாமே பரிசீலித்து வாழ வேண்டிய துர்ப்பாக்கிய  நிலைக்குள்ளாகிறோம். இவ்வலநிலையை அங்கதமாகவும் அதேசமயம் அழுத்தமாகவும் வெளிப்படுத்துகிறது ‘மீளவும் மரங்களில் தொங்கி விளையாடலாம்’.

“ஓடிய சைக்கிளில் இருந்து 
இறங்கி நடந்து 
ஓட வேண்டியிருக்கிறது
போட்ட தொப்பி 
கழற்றி போட வேண்டியிருக்கிறது
எல்லாம் சரிபார்த்து மூடப்பட்ட 
கைப்பை 
மீளவும் திறந்து திறந்து 
மூடவேண்டியிருக்கிறது
என் அடையாளங்கள் அனைத்தும் 
சரியாகவே உள்ளன 
என்றாலும்
எடுக்கவும்  பார்க்கவும் வைக்கவும் வேண்டியிருக்கிறது”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -73)

அச்சத்துடனும் ஆற்றாமையோடும் ஒவ்வொரு ஈழக்குடிமகனும் கழித்த வாழ்நாட்களை கண்முன் நிறுத்தும் இக்கவிதை காலத்தோடு கருத்தூன்றி நிற்கிறது.நாதியற்று வெறுமனே கழியும் பொழுதுகள், எம்மை கேட்காமலே எம்மிடம் இருந்து பறிக்கப்படும் எம் உடமைகள், எல்லைகளின்றி காத்திருப்பின் நடுவே பழுத்துப்போன இலைகளாய் உதிரும் வாழ்வு என மூடுண்ட நகரத்தின் அகப் புறவெளிகளைக்காட்சிப்படுத்தும் துவாரகனின் கவிதைகள் மனித துயரின் பதிவுகளாய் அவற்றின் சாட்சிகளாய் விளங்குபவை."

கட்டுரையை தொடர்ந்து வாசிக்க
http://eathuvarai.net/?p=1255

என்னைப் பற்றி - கு. றஜீபன்


யுத்தத்திற்குப் பின்னரான யாழ்ப்பாணத்துக் கவிதை முயற்சிகள்! என்ற கட்டுரையில் கு. றஜீபன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

"1996 காலப்பகுதியில் கவிதை உலகில் பிரவேசித்தவர் குணேஸ்வரன். இவர் துவாரகன் என்ற பெயரில் கவிதைகள் எழுதி வருகின்றார். 2008ம் ஆண்டில் வெளியிடப்பட்ட “மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள்” என்ற கவிதைத் தொகுப்பின் மூலம் நன்கு அடையாளம் காணப்பட்டவராக விளங்குகிறார். கவிதைத் தளத்தில் சொற்சேர்க்கைகளும் அது இயல்பாக வந்துவிழும் ஒழுங்கமைவிலுமே நல்ல கவிதை பிறக்கமுடியும் அப்படிப்பட்ட கவிதைகள் துவாரகனுடையவை. யுத்தத்திற்குப் பின்னரான கவிதை முயற்சியிலும் எழுதிவருகின்றார். மல்லிகை, புதிய உலகம், சக்தி, தூண்டி, புதிய தரிசனம், உயிர் நிழல், கலைமுகம், ஜீவநதி, தாயகம், கலைக்கதிர் போன்ற சஞ்சிகைகளிலும் உதயன், சஞ்சீவி, நமது ஈழநாடு, தினக்குரல், சவிதைச்சாரம், தேடல் திருவுடையாள் போன்ற பத்திரிகையிலும் எழுதி இருக்கிறார். இவற்றைவிட இன்று பெரும்பாலும் இணைய சஞ்சிகைகளிலேயே அதிகம் எழுதி வருகின்றார். யுத்தம், யுத்த அவலம், தமிழர் இருப்பு நிலைதொடர்பான அலசல்களாக இவரது அண்மைய படைப்புக்கள் விளங்குகின்றன. யாழ்ப்பாணத்துக் கவிதை முயற்சியில் குறிப்பிடக்கூடியவராக விளங்குகிறார்"


கட்டுரையை மேலும் வாசிக்க  
http://eathuvarai.net/?p=1011

ஜூலை 13, 2012

நண்பர் இளங்கோவுடன்


கனடாவில் இருந்து வந்த நண்பர் இளங்கோவை சந்தித்தபோது நாங்கள் எடுத்துக்கொண்ட ஒளிப்படங்கள்.

- துவாரகன்

 இளங்கோவும் யோ. கர்ணனும்

 அஜந்தகுமார், யோ.கர்ணன், இளங்கோ

 அஜந்தகுமார், துவாரகன், இளங்கோ

 இளங்கோ, துவாரகன், யோ. கர்ணன், சீனா உதயன்

 இளங்கோவும் இராகவனும்

ஜூன் 24, 2012

எனது நேர்காணல்


24.06.2012 தினக்குரலில் எனது நேர்காணல் வெளிவந்துள்ளது. இது ஏற்கனவே தமிழகத்திலிருந்து வெளிவந்த அம்ருதா இதழில் வெளியாகியிருந்தது.
பின்வரும்  சுட்டியினூடாக நேர்காணலை முழுமையாக வாசிக்கமுடியும்.
http://ayal-palathumpaththum.blogspot.com/2012/05/blog-post.html

http://epaper.thinakkural.com/

ஜூன் 23, 2012

நூல் தேட்டத்தில் எனது தொகுப்புக்கள் பற்றிய பதிவு

 நூலகர் செல்வராஜா வருடாவருடம் தொகுத்து வெளியிடும் 'நூல்தேட்டம்' தொகுதியில் எனது தொகுப்பு நூல்கள் பற்றிய விபரமும் இடம்பெற்றுள்ளது.

அம்மா - தேர்ந்த கவிதைகள் சில

வெளிநாட்டுக் கதைகள்

மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்


ஜூன் 15, 2012

நன்றி இலக்கியக் குவியம்


(முகநூலில் இருந்து)
யாழ் இலக்கிய குவியம்

துவாரகன்

துவாரகன் என்ற புனைபெயர் கொண்ட சு. குணேஸ்வரன் (S. Kuneswaran) ஈழத்துக் கவிஞராக, விமரிசகராக, புலம்பெயர் இலக்கிய ஆய்வாளராக அறிமுகமானவர்.

துவாரகன், ஆரம்பக் கல்வியைக் கெருடாவில் இந்து தமிழ்க் கலவன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை தொண்...டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்திலும் க. பொ. த. உயர்தரத்தை யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியிலும் பயின்றார். பெற்றோர் சுப்பிரமணியம், கமலாதேவி.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் (தமிழ் சிறப்பு) பட்டத்தைப் பெற்றார். '20ஆம் நூற்றாண்டில் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் கவிதை, புனைகதைகள்' என்ற ஆய்வுக்காக பேராசிரியர் அ. சண்முகதாசின் நெறியாள்கையில் 2006இல் முதுதத்துவமாணிப் பட்டத்தைப் பெற்றார்.
தற்போது யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார்.

கவிதைகளுடன் விமரிசனத்திலும் ஈடுபாடு கொண்டவர். இவரின் கவிதைகள் உயிர்நிழல், வார்ப்பு, பதிவுகள், திண்ணை, அதிகாலை.கொம், காற்றுவெளி, தமிழ் ஓதர்ஸ் மற்றும் பல இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன.
ஈழத்து இதழ்களான மல்லிகை, கலைமுகம், ஞானம், புதியதரிசனம், வெளிச்சம், தாயகம், செங்கதிர் மற்றும் புலம்பெயர் இதழ்களான உயிர்நிழல், எதுவரை போன்றவற்றிலும் தமிழகத்திலிருந்து வெளிவரும் யுகமாயினி, உயிர்மை ஆகியவற்றிலும் வீரகேசரி, தினகரன், நமது ஈழநாடு, உதயன், வலம்புரி, தினக்குரல், சுடர் ஒளி ஆகியவற்றிலும் இவரது படைப்புக்கள் வெளியாகியுள்ளன.

இவரது நூல்கள்.

மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள் - கவிதைத் தொகுப்பு, வெளியீடு: தினைப்புனம், யாழ்ப்பாணம், 2008
அலைவும் உலைவும், புலம்பெயர் படைப்பிலக்கியம் குறித்த பார்வை (கட்டுரைகள்), வெளியீடு:- தினைப்புனம், முதற்பதிப்பு 2009

இவரது கவிதையொன்று.

சபிக்கப்பட்ட உலகு.

மீளவும் பூச்சிகளும் பறவைகளும்
வாழும் உலகு எனக்காகச்
சபிக்கப்பட்டிருக்கிறது
எப்போதாவது ஒருமுறை வரும் வாகனத்தில்
ஒரு பயணத்திற்காகக் காத்திருத்தல்
வழமையாயிற்று

எத்தனை முறைதான் இப்படிச் சறுக்கி விழுவது?

அதிகமாக எல்லா அதிகார வர்க்கத்திற்கும்
மூளைப் பிசகு ஏற்பட்டிருக்க வேண்டும்?

சீறிவரும் வாகனத்தில் இருந்து
கண்ணாடிக் கதவு இறக்கி
சுட்டுவிரல் காட்டவும்
லாபத்தில் பங்குபோடவும்
நேரம் குறித்து வருவார்கள்.
கூடவே முதுகு சொறிய
கொஞ்சம் ஒட்டியிருக்கும்.

பூச்சிகளும் பறவைகளும் மிருகங்களுமே
வாழக்கூடிய வனவாசகத்தில்
பட்டரும் ஏசியும் நெற்வேர்க்கும் பயன்படுத்தலாம்
என ஆலோசனை கூறுகிறார்கள் மூளைகெட்டவர்கள்

மூன்று மணித்தியாலமாக
யாரோ ஒரு நல்லவனின் வருகைக்காக
பாசிபிடித்த மதகு ஒன்றில் குந்தியிருக்கிறேன்

வீதியை வெறிப்பதும்
குரங்குகளின் ஊஞ்சலை ரசிப்பதும்
பறவைகளின் கீச்சிடலும் பழக்கமாயிற்று

மழைபெய்து ஈரமாக்கிய கிரவல் மண்ணில்
மண்புழுக்கள் நெளிவதையும்
வாரடித்து ஓடிக்கொண்டிருக்கும் நீரில்
தத்தளித்துக் கொண்டிருக்கும் எறும்புகளையும்
இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன்

இந்த உலகில் வாழச் சபிக்கப்பட்ட
என்னைப் பார்த்து வாலாட்டிக் கொண்டு
ஒரு கண்டன்கறுவல் வீதியைக் குறுக்கறுக்கிறது

*கண்டன்கறுவல் - ஒரு வகைப் பாம்பு
See more
— with Thevarasa Mukunthan and 7 others.
Photo: துவாரகன்



துவாரகன் என்ற புனைபெயர் கொண்ட சு. குணேஸ்வரன் (S. Kuneswaran) ஈழத்துக் 
கவிஞராக, விமரிசகராக, புலம்பெயர் இலக்கிய ஆய்வாளராக அறிமுகமானவர்.



துவாரகன், ஆரம்பக் கல்வியைக் கெருடாவில் இந்து தமிழ்க் கலவன் பாடசாலையிலும்
 இடைநிலைக் கல்வியை தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்திலும் 
க. பொ. த. உயர்தரத்தை யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியிலும் 
பயின்றார். பெற்றோர் சுப்பிரமணியம், கமலாதேவி.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் (தமிழ் சிறப்பு) பட்டத்தைப் 
பெற்றார். '20ஆம் நூற்றாண்டில் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் 
கவிதை, புனைகதைகள்' என்ற ஆய்வுக்காக பேராசிரியர் அ. சண்முகதாசின் 
நெறியாள்கையில் 2006இல் முதுதத்துவமாணிப் பட்டத்தைப் பெற்றார்.

தற்போது யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில் 
ஆசிரியராகப் பணியாற்றுகின்றார்.



கவிதைகளுடன் விமரிசனத்திலும் ஈடுபாடு கொண்டவர். இவரின் கவிதைகள் 
உயிர்நிழல், வார்ப்பு, பதிவுகள், திண்ணை, அதிகாலை.கொம், காற்றுவெளி, தமிழ் 
ஓதர்ஸ் மற்றும் பல இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன.

ஈழத்து இதழ்களான மல்லிகை, கலைமுகம், ஞானம், புதியதரிசனம், வெளிச்சம், 
தாயகம், செங்கதிர் மற்றும் புலம்பெயர் இதழ்களான உயிர்நிழல், எதுவரை 
போன்றவற்றிலும் தமிழகத்திலிருந்து வெளிவரும் யுகமாயினி, உயிர்மை 
ஆகியவற்றிலும் வீரகேசரி, தினகரன், நமது ஈழநாடு, உதயன், வலம்புரி, 
தினக்குரல், சுடர் ஒளி ஆகியவற்றிலும் இவரது படைப்புக்கள் வெளியாகியுள்ளன.

 

இவரது நூல்கள்.



 மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள் - கவிதைத் தொகுப்பு, வெளியீடு: 
தினைப்புனம், யாழ்ப்பாணம், 2008

 அலைவும் உலைவும், புலம்பெயர் படைப்பிலக்கியம் குறித்த பார்வை 
(கட்டுரைகள்), வெளியீடு:- தினைப்புனம், முதற்பதிப்பு 2009

 

 இவரது கவிதையொன்று.



சபிக்கப்பட்ட உலகு.



மீளவும் பூச்சிகளும் பறவைகளும்

வாழும் உலகு எனக்காகச்

சபிக்கப்பட்டிருக்கிறது

எப்போதாவது ஒருமுறை வரும் வாகனத்தில்

ஒரு பயணத்திற்காகக் காத்திருத்தல்

வழமையாயிற்று



எத்தனை முறைதான் இப்படிச் சறுக்கி விழுவது?



அதிகமாக எல்லா அதிகார வர்க்கத்திற்கும்

மூளைப் பிசகு ஏற்பட்டிருக்க வேண்டும்?



சீறிவரும் வாகனத்தில் இருந்து

கண்ணாடிக் கதவு இறக்கி

சுட்டுவிரல் காட்டவும்

லாபத்தில் பங்குபோடவும்

நேரம் குறித்து வருவார்கள்.

கூடவே முதுகு சொறிய

கொஞ்சம் ஒட்டியிருக்கும்.



பூச்சிகளும் பறவைகளும் மிருகங்களுமே

வாழக்கூடிய வனவாசகத்தில்

பட்டரும் ஏசியும் நெற்வேர்க்கும் பயன்படுத்தலாம்

என ஆலோசனை கூறுகிறார்கள் மூளைகெட்டவர்கள்



மூன்று மணித்தியாலமாக

யாரோ ஒரு நல்லவனின் வருகைக்காக

பாசிபிடித்த மதகு ஒன்றில் குந்தியிருக்கிறேன்



வீதியை வெறிப்பதும்

குரங்குகளின் ஊஞ்சலை ரசிப்பதும்

பறவைகளின் கீச்சிடலும் பழக்கமாயிற்று



மழைபெய்து ஈரமாக்கிய கிரவல் மண்ணில்

மண்புழுக்கள் நெளிவதையும்

வாரடித்து ஓடிக்கொண்டிருக்கும் நீரில்

தத்தளித்துக் கொண்டிருக்கும் எறும்புகளையும்

இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன்



இந்த உலகில் வாழச் சபிக்கப்பட்ட

என்னைப் பார்த்து வாலாட்டிக் கொண்டு

ஒரு கண்டன்கறுவல் வீதியைக் குறுக்கறுக்கிறது



*கண்டன்கறுவல் - ஒரு வகைப் பாம்பு

· ·

    • Thevarasa Mukunthan யாழ்ப்பாணம் இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் தொடர்பற்று மூடுண்டிருந்த காலகட்டத்தை கவிதையில் பதிவு செய்ததில் துவாரகனின் பங்கு மகத்தானது. புலம் பெயர் இலக்கியம் தொடர்பான ஆய்வுகளில் இவரின் பங்களிப்பு மிகக் காத்திரமானது. எல்லாவற்றையும் விட மிக நல்ல மனிதர்.
      Yesterday at 15:24 · · 3

    • யாழ் இலக்கிய குவியம்
      ஒரு கவிதை உருவாகும் கணங்கள் மிக முக்கியமானவை என்று எண்ணுகிறேன். எமக்கு முன்னால் ஒவ்வொரு கணங்களிலும் பல நிகழ்வுகள் நிகழ்ந்தேறி வருகின்றன. எரிநெருப்பு எம்மைச் சுடுவதும், ஒரு இனிய இசை எம்மைக் கொள்ளை கொள்வதும் மாறாக எரிநெருப்பே விருப்புக்குர...ியதாக மாறுவதும், இனிய இசை எம்மை வருத்துவதும் திரும்பவும் திரும்பவும் நிகழ்ந்தேறி வருகின்றன. இவற்றில் எல்லாம் கவிதையாவதுமில்லை. சில சமயங்களில் பஸ் யன்னலூடாகப் பயணிக்கும் குழந்தையொன்று முகம் தெரியாத எம்மைப் பார்த்து கையசைப்பது போல் கவிதை எமக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தி விட்டுச் சென்றுவிடும் ---- நேர்காணல் ஒன்றில் கவிதை பற்றி துவாரகன் .See more

      Yesterday at 16:28 · · 4

    • நன்றி இலக்கியக்குவியம் மற்றும் வேலணையூர் தாஸ்.
      · 2

ஏப்ரல் 28, 2012

கா. சூரன்

தமிழ் விக்கிபீடியாவில் எனது பங்களிப்பு வரிசையில்....சைவப்பெரியார் கா. சூரன்

 http://tawp.in/r/35n3
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைவப்பெரியார் கா. சூரன் (ஆகத்து 1, 1881 - 1956) இலங்கையின் வடக்கே வடமராட்சியில் அமைந்துள்ள தேவரையாளி சைவ வித்தியாசாலையின் நிறுவனராகவும் முதல்வராகவும் இருந்தவர். இவர் ஒரு சமூக முன்னோடியுமாவார். பதிகங்கள் பாடுவதிலும் கவியாற்றுவதிலும் வல்லவர். முற்போக்கு எண்ணம் கொண்டவர்.

பொருளடக்கம் [மறை]
1 வாழ்க்கைச் சுருக்கம்
2 சமூகப்பணிகள்
3 தொடர்பான பதிவுகள்
3.1 சைவப்புலவர் சூரன் எழுதியவை
3.2 ஏனையவர்கள் எழுதியவை
4 நினைவுச்சின்னம்
5 மேற்கோள்கள்
6 வெளியிணைப்புக்கள்
[தொகு]வாழ்க்கைச் சுருக்கம்

1881 ஆம் ஆண்டு ஆவணி மாதம் கரவெட்டியில் பிறந்தார். தந்தையார் வே. காத்தார், தாயார் வள்ளி ஆகியோருக்கு மூத்த புதல்வனாகப் பிறந்தார். கரவெட்டியில் இருந்த உவெசுலியன் மிசன் கிறித்தவப் பாடசாலையில் 5 ஆம் வகுப்புவரை கல்வி கற்றார். 1917 இல் வதிரியில் மாணிக்கம் என்பவரை மணஞ் செய்தார். பிள்ளைகள் மகள் சிவபாக்கியம், மகன் ஏகாம்பரம்.

[தொகு]சமூகப்பணிகள்

தேவரையாளி சைவவித்தியாசாலையின் நிறுவனர். தேவரையாளி ஆரம்பப் பாடசாலையை வதிரி ‘வண்ணஞ்சீமா’ என்ற காணியில் சிறு கொட்டிலில் தொடக்கி பின்னர் 1917 இல் தற்போது அமைந்திருக்கும் இடத்தில் பிரவேசம் செய்வித்தார். 1919 இல் பாடசாலை பதிவு செய்யப்பட்டது.
1923 ஆம் ஆண்டில் வதிரியில் அண்ணமார் கோவிலில் நடைபெற்ற ஆடு பலியிடுதலை சைவப்பெரியார் சூரன் பலிபீடத்தில் தன் தலையை வைத்து ஆட்டை வெட்டுவதற்க்கு முன்னர் தன் தலையை வெட்டுங்கள் எனக் குரல் கொடுத்து அந்த ஊரில் பலியிடுதலை நிறுத்திவைத்தார்[1]. அதன் பின்னர் அந்த அண்ணமார் கோவில் பிள்ளையார் கோவிலாக மாறியது. இந்த நிகழ்வுகள் பற்றி பேராசிரியர் கா. சிவத்தம்பி பல இடங்களில் எழுதியிருக்கிறார்.
[தொகு]தொடர்பான பதிவுகள்

[தொகு]சைவப்புலவர் சூரன் எழுதியவை
பராசக்தி படவிமர்சனம் – சுதந்திரன் பத்திரிகையில் பிரசுரமானது. இது எட்டுப்பக்கங்களைக் கொண்ட சிறிய பிரசுரமாகவும் 1953 இல் 15 சத விலையில் வெளிவந்தது. பராசக்தி படவிமர்சனம் என்ற பெயரில் அமரர் வல்லிபுரம் கந்தசாமி நினைவு வெளியீடாக 10.03.2004 இல் மீளவும் வெளியிடப்பட்டது.
மகாத்மா காந்தி மறைந்தபோது அவர் மீது பல இரங்கற்பாடல்களை எழுதியவர்.
சூரன் சுயசரிதை (பதிப்பாசிரியர்: ராஜ சிறீகாந்தன், 2004, பக்கம் 148.
[தொகு]ஏனையவர்கள் எழுதியவை
சூரனின் நினைவுதினத்தில் வெளியிடப்பட்ட ‘கல்வெட்டு’
கல்கி "இலங்கையில் ஒரு வாரம்" என்ற கட்டுரையின் 8 ஆம் அத்தியாயத்தில் சைவப்பெரியார் சூரன் பற்றியும் அப்போது இலங்கையில் நிலவிய தீண்டாமை பற்றியும் 08.09.1950 இல் வெளிவந்த கல்கி இதழில் எழுதியுள்ளார்.
[தொகு]நினைவுச்சின்னம்

சைவப்பெரியார் சூரன் சிலை தேவரையாளி இந்துக்கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இவ்வுருவச் சிலைக்கு 06.02.2004 இல் அப்போதைய அதிபர், மா. குட்டித்தம்பி அடிக்கல் நாட்டினார். வடமராட்சி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளராக இருந்த வி. அருளானந்தம் 14.06.2004 இல் சூரன்சிலையை திறந்து வைத்தார்.
[தொகு]மேற்கோள்கள்

↑ வதிரி பூவற்கரையான்
[தொகு]வெளியிணைப்புக்கள்

நூலகம் திட்டத்தில் சூரன் சுயசரிதை
சூரன் எழுதிய பராசக்தி படவிமர்சனம்
பகுப்புகள்: 1881 பிறப்புகள்1956 இறப்புகள்இலங்கையின் சைவப்பெரியார்கள்

ஏப்ரல் 27, 2012

எனது நேர்காணல்

அம்ருதா ஏப்ரல் 2012 இதழில் எனது நேர்காணல் வெளியாகியுள்ளது. நண்பர்கள் இதழ் கிடைத்தால் பார்க்கலாம்.
 (நேர்காணலை பின்னர் எனது வலையில் இணைப்பேன்)



ஏப்ரல் 19, 2012

விக்கிபீடியாவில் எனது பங்களிப்பு வரிசையில் ஆனந்தமயில்




ஆனந்தமயில்http://tawp.in/r/354r

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த. ஆனந்தமயில், ஒரு ஈழத்து எழுத்தாளர். (தோற்றம் : நவம்பர் 081947 மறைவு : மார்ச் 11,2012சிறுகதைகவிதைகுறுநாவல்,நாடகங்கள்மொழிபெயர்ப்புக்கள், சிறுவர் பாடல்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். 1995 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு விபத்தின் போது ஏற்பட்ட தாக்கத்தால் இவர் நடையை இழந்தார். பின்னர் 2012 ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று காலமானார்.

பொருளடக்கம்

  [மறை

[தொகு]கல்வி

ஆரம்பக்கல்வியை யா/கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலத்திலும் இடைநிலைக் கல்வியை யா /நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம் மற்றும் கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரியிலும் கற்றார். உயர் தரத்தை வல்வை சிதம்பராக் கல்லூரியில் கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாகப் பயின்று 1947 இல் கலைமாணிப் பட்டம் பெற்றார்.

[தொகு]குடும்பம்

மனைவி நகுலேஸ்வரி, பிள்ளைகள் தீபவர்ணன், தாமரைவர்ணன், நிரூபவர்ணன்(மறைவு), நித்திலவர்ணன், ரூபவர்ணன், ஜீவவர்ணன், முல்லைத்திவ்யன், வர்ணாம்பாள்

[தொகு]தொழில்

எழுதுவினைஞராக பணிபுரிந்தார். கொழும்பு பரீட்சைத் திணைக்களத்திலும்; மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், அனுராதபுரம், நுவரெலியா, முல்லைத்தீவு ஆகிய கல்வித்திணைக்களங்களில் பணியாற்றினார். இறுதியாக பருத்தித்துறை வலயக் கல்வி அலுவலகத்திலும் கரவெட்டி கோட்டக்கல்வி அலுவலகத்திலும் பணியாற்றினார்.

[தொகு]எழுத்துப்பணி

சிறுகதை
ஒரு எழுதுவினைஞனின் டயறி என்ற சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது. இத்தொகுதியில் ஒற்றைக்கால்கோழி, முருகைக்கற்பூக்கள், காக்காச்சி கரிமகளே, திருவிழா, ஓர் எழுதுவினைஞனின் டயறி, வாழும் வெளி, ஒரு கட்டுமரம் காத்திருக்கிறது, கொலுமீட்பு, விதி, கலை வந்தபோது, விளக்கீடு ஆகிய 12 சிறுகதைகள் உள்ளன.
“சோகம் நிரம்பி யாத்திரை” என்ற சிவனெளிபாதமலை பயணம் பற்றி இவர் எழுதிய சிறுகதை அச்சுருப்பெறாத நிலையில் தொலைந்துவிட்டது.
கவிதை
‘வீச்சுவலைக்காரனும் மாதுளம் பிஞ்சுகளும்’ என்ற அச்சுருப்பெறாத கவிதைத்தொகுதியும், தொகுக்கப்படாத பல கவிதைகளும் உள்ளன. இவை இன்னமும் நூலுருப் பெறவில்லை.
குறுநாவல்
இவர் ‘அம்மாவரை அவன்’ என்ற குறுநாவலை எழுதியுள்ளார். இது 2012 இல் வெளிவந்த “நினைவிலிருந்து சொற்களுக்கு”என்ற தொகுப்பில் உள்ளது.
நாடகம்
இவர் எழுதிய ‘சீதனம்’ என்ற நாடகம் 1980-1981 காலப்பகுதியில் பொலிகை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தால் மேடையேற்றப்பட்டது. இவரது ‘வாக்குறுதி’, ‘எதற்குமோர் எல்லையுண்டு’ ஆகிய நாடகங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. செல்லச்சாமியின் ‘விடுதலைக்கோர் பார்வை’ என்ற நாடகத்தில் பெண் வேடமிட்டு நடித்தார்.

[தொகு]பெற்ற சிறப்புகள்

  • இவருடைய ஒரு எழுதுவினைஞனின் டயறி என்ற சிறுகதைத் தொகுதி 2008 இல் வடக்கு மாகாண சிறந்த நூலுக்கான விருது மற்றும் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கும் தமிழியல் விருது ஆகியவைகளைப் பெற்றது.

[தொகு]வெளிவந்த நூல்கள்

  • ஒரு எழுதுவினைஞனின் டயறி (வர்ணா வெளியீடு - மார்ச் 2008)
  • நினைவிலிருந்து சொற்களுக்கு… (ஏப்ரல் 2012)

[தொகு]வெளியிணைப்பு

ஏப்ரல் 13, 2012

புனைவும் புதிதும்




எனது 'அலைவும் உலைவும்' கட்டுரைத்தொகுதிக்குப் பின்னர் இம்மாத இறுதியில் வெளிவரவிருக்கும் இரண்டாவது கட்டுரைத் தொகுதியான 'புனைவும் புதிதும்' நூலின் முன் அட்டை.

- சு. குணேஸ்வரன்

ஏப்ரல் 11, 2012

மறுமலர்ச்சிக் கவிதைகள்

விக்கிபீடியாவில் எனது பங்களிப்பு

மறுமலர்ச்சிக் கவிதைகள் 


மறுமலர்ச்சிக் கவிதைகள்http://tawp.in/r/34g3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
S.kuneswaran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:45, 6 ஏப்ரல் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு←முந்தைய தொகுப்பு | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
மறுமலர்ச்சிக் கவிதைகள் என்பது இலங்கையில் வெளியிடப்பட்ட ஒரு கவிதைத் தொகுப்பு நூல் ஆகும். 1943 ஆம் ஆண்டில் ஈழத்தில் உருவான மறுமலர்ச்சி சங்கத்தின் ஊடாக மறுமலர்ச்சி என்ற இதழ் 1946 முதல் 1948 வரை வெளிவந்தது. அவ்விதழில் வெளிவந்த கவிதைகளே மறுமலர்ச்சிக் கவிதைகள் என்ற பெயரில் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

[தொகு]நூல் விபரம்

  • மறுமலர்ச்சிக் கவிதைகள்,
  • தொகுப்பும் பதிப்பும் - செல்லத்துரை சுதர்சன்,
  • வெளியீட்டு ஆண்டு - டிசம்பர் 2006,
  • ISBN:955-544-1-2,
  • அச்சிட்டோர் - 'கிறிப்ஸ்' பிறின்டேஸ்

[தொகு]தொகுப்பில் உள்ள கவிதைகள்

  • நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் கவிதைகள்-கற்பகப் பழம், இலவுகாத்த கிளி
  • மஹாகவி து. உருத்திரமூர்த்தியின் கவிதைகள்-இரவு, காதலுள்ளம், அலையெடுத்த கடலென...
  • யாழ்ப்பாணன் (வே. சிவக்கொழுந்து)கவிதைகள் - சக்தியின் இருப்பிடம்,முதற்துயரம், பொல்லாப்பு செய்யாதே, தொழிலாளர் விதியிதுவோ?, இனி உலகில்...முதல்வன் யார்?, அன்பின் திறன், பாரதி
  • சோ. நடராஜன்கவிதைகள் - எங்கே காணலாம், மோட்டு விக்கிரகம், கழுதை.
  • நாவற்குழியூர் நடராஜன் கவிதைகள் - நாங்கள், பெரிதும் சிறிதும், சுழற்சி, கேட்டியோ பாரதீ!, சிறை, எனக்கு அது முடியாது, தெரியாதா?, பச்சை பச்சையாய், என் மனைவிக்கு, எம்முன் இருந்த தெய்வம்.
  • சாரதா (க. இ. சரவணமுத்து)கவிதைகள் - துயிலெழுச்சி, வாழ்க்கைச் சுவடு, எங்கள் நாவலன், அதுவும் ஒரு காலம், வேண்டாத புத்திமதி, வேண்டும் புத்திமதி,வேளைவரும், கனக்கவேன் கதைகள் ஐயா, நிதானமில்லை.
  • வரதர் (தி. ச. வரதராசன்)கவிதைகள் - மீசையை முறுக்கி விட்டு, அம்மான் மகள்.
  • கலைவாணன் கவிதை - உலாவிடுவேன்.
  • கதிரேசன் கவிதை - வேற்றுமை
  • வ. இ கவிதை - இலங்கை மாதாவுக்கு
  • சோ. தியாகராஜன் கவிதை - வாழ்வுத் திரையில்.
  • காவலூர்க் கைலாசன் கவிதை - புது யுகத்தில்.
  • கோட்டாறு எஸ். ஆதிமூலப்பெருமாள் ஆரியர் கவிதை - பக்தியால் ஆகுமோ?
  • பரமேஸ் கவிதை - குயிலின் பதில்
  • கவிஞன் கவிதை - பொங்கலோ பொங்கல்.
  • கோட்டாறு தே. ப பெருமாள் கவிதை - அருட்கடலே வாழ்க
  • கு. பெரியதம்பி கவிதை - ஈழத்தாய்
  • சுவாமி விபுலாநந்தர் கவிதை - பூஞ்சோலைக் காவலன்
  • தில்லைச்சிவன் கவிதை - பட்டணத்து மச்சினி
  • வித்துவான் க. வேந்தனார் கவிதை - ஆட்டை வெட்டும் கத்திக்கு உங்கள் ஆவி கொடுக்க வாருங்கள்.
  • நடனம் கவிதை - பட்டிக்காட்டான் பார்த்த படம்.

[தொகு]வெளியிணைப்பு