ஜூன் 24, 2012

எனது நேர்காணல்


24.06.2012 தினக்குரலில் எனது நேர்காணல் வெளிவந்துள்ளது. இது ஏற்கனவே தமிழகத்திலிருந்து வெளிவந்த அம்ருதா இதழில் வெளியாகியிருந்தது.
பின்வரும்  சுட்டியினூடாக நேர்காணலை முழுமையாக வாசிக்கமுடியும்.
http://ayal-palathumpaththum.blogspot.com/2012/05/blog-post.html

http://epaper.thinakkural.com/

ஜூன் 23, 2012

நூல் தேட்டத்தில் எனது தொகுப்புக்கள் பற்றிய பதிவு

 நூலகர் செல்வராஜா வருடாவருடம் தொகுத்து வெளியிடும் 'நூல்தேட்டம்' தொகுதியில் எனது தொகுப்பு நூல்கள் பற்றிய விபரமும் இடம்பெற்றுள்ளது.

அம்மா - தேர்ந்த கவிதைகள் சில

வெளிநாட்டுக் கதைகள்

மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்


ஜூன் 15, 2012

நன்றி இலக்கியக் குவியம்


(முகநூலில் இருந்து)
யாழ் இலக்கிய குவியம்

துவாரகன்

துவாரகன் என்ற புனைபெயர் கொண்ட சு. குணேஸ்வரன் (S. Kuneswaran) ஈழத்துக் கவிஞராக, விமரிசகராக, புலம்பெயர் இலக்கிய ஆய்வாளராக அறிமுகமானவர்.

துவாரகன், ஆரம்பக் கல்வியைக் கெருடாவில் இந்து தமிழ்க் கலவன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை தொண்...டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்திலும் க. பொ. த. உயர்தரத்தை யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியிலும் பயின்றார். பெற்றோர் சுப்பிரமணியம், கமலாதேவி.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் (தமிழ் சிறப்பு) பட்டத்தைப் பெற்றார். '20ஆம் நூற்றாண்டில் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் கவிதை, புனைகதைகள்' என்ற ஆய்வுக்காக பேராசிரியர் அ. சண்முகதாசின் நெறியாள்கையில் 2006இல் முதுதத்துவமாணிப் பட்டத்தைப் பெற்றார்.
தற்போது யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார்.

கவிதைகளுடன் விமரிசனத்திலும் ஈடுபாடு கொண்டவர். இவரின் கவிதைகள் உயிர்நிழல், வார்ப்பு, பதிவுகள், திண்ணை, அதிகாலை.கொம், காற்றுவெளி, தமிழ் ஓதர்ஸ் மற்றும் பல இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன.
ஈழத்து இதழ்களான மல்லிகை, கலைமுகம், ஞானம், புதியதரிசனம், வெளிச்சம், தாயகம், செங்கதிர் மற்றும் புலம்பெயர் இதழ்களான உயிர்நிழல், எதுவரை போன்றவற்றிலும் தமிழகத்திலிருந்து வெளிவரும் யுகமாயினி, உயிர்மை ஆகியவற்றிலும் வீரகேசரி, தினகரன், நமது ஈழநாடு, உதயன், வலம்புரி, தினக்குரல், சுடர் ஒளி ஆகியவற்றிலும் இவரது படைப்புக்கள் வெளியாகியுள்ளன.

இவரது நூல்கள்.

மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள் - கவிதைத் தொகுப்பு, வெளியீடு: தினைப்புனம், யாழ்ப்பாணம், 2008
அலைவும் உலைவும், புலம்பெயர் படைப்பிலக்கியம் குறித்த பார்வை (கட்டுரைகள்), வெளியீடு:- தினைப்புனம், முதற்பதிப்பு 2009

இவரது கவிதையொன்று.

சபிக்கப்பட்ட உலகு.

மீளவும் பூச்சிகளும் பறவைகளும்
வாழும் உலகு எனக்காகச்
சபிக்கப்பட்டிருக்கிறது
எப்போதாவது ஒருமுறை வரும் வாகனத்தில்
ஒரு பயணத்திற்காகக் காத்திருத்தல்
வழமையாயிற்று

எத்தனை முறைதான் இப்படிச் சறுக்கி விழுவது?

அதிகமாக எல்லா அதிகார வர்க்கத்திற்கும்
மூளைப் பிசகு ஏற்பட்டிருக்க வேண்டும்?

சீறிவரும் வாகனத்தில் இருந்து
கண்ணாடிக் கதவு இறக்கி
சுட்டுவிரல் காட்டவும்
லாபத்தில் பங்குபோடவும்
நேரம் குறித்து வருவார்கள்.
கூடவே முதுகு சொறிய
கொஞ்சம் ஒட்டியிருக்கும்.

பூச்சிகளும் பறவைகளும் மிருகங்களுமே
வாழக்கூடிய வனவாசகத்தில்
பட்டரும் ஏசியும் நெற்வேர்க்கும் பயன்படுத்தலாம்
என ஆலோசனை கூறுகிறார்கள் மூளைகெட்டவர்கள்

மூன்று மணித்தியாலமாக
யாரோ ஒரு நல்லவனின் வருகைக்காக
பாசிபிடித்த மதகு ஒன்றில் குந்தியிருக்கிறேன்

வீதியை வெறிப்பதும்
குரங்குகளின் ஊஞ்சலை ரசிப்பதும்
பறவைகளின் கீச்சிடலும் பழக்கமாயிற்று

மழைபெய்து ஈரமாக்கிய கிரவல் மண்ணில்
மண்புழுக்கள் நெளிவதையும்
வாரடித்து ஓடிக்கொண்டிருக்கும் நீரில்
தத்தளித்துக் கொண்டிருக்கும் எறும்புகளையும்
இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன்

இந்த உலகில் வாழச் சபிக்கப்பட்ட
என்னைப் பார்த்து வாலாட்டிக் கொண்டு
ஒரு கண்டன்கறுவல் வீதியைக் குறுக்கறுக்கிறது

*கண்டன்கறுவல் - ஒரு வகைப் பாம்பு
See more
— with Thevarasa Mukunthan and 7 others.
Photo: துவாரகன்துவாரகன் என்ற புனைபெயர் கொண்ட சு. குணேஸ்வரன் (S. Kuneswaran) ஈழத்துக் 
கவிஞராக, விமரிசகராக, புலம்பெயர் இலக்கிய ஆய்வாளராக அறிமுகமானவர்.துவாரகன், ஆரம்பக் கல்வியைக் கெருடாவில் இந்து தமிழ்க் கலவன் பாடசாலையிலும்
 இடைநிலைக் கல்வியை தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்திலும் 
க. பொ. த. உயர்தரத்தை யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியிலும் 
பயின்றார். பெற்றோர் சுப்பிரமணியம், கமலாதேவி.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் (தமிழ் சிறப்பு) பட்டத்தைப் 
பெற்றார். '20ஆம் நூற்றாண்டில் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் 
கவிதை, புனைகதைகள்' என்ற ஆய்வுக்காக பேராசிரியர் அ. சண்முகதாசின் 
நெறியாள்கையில் 2006இல் முதுதத்துவமாணிப் பட்டத்தைப் பெற்றார்.

தற்போது யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில் 
ஆசிரியராகப் பணியாற்றுகின்றார்.கவிதைகளுடன் விமரிசனத்திலும் ஈடுபாடு கொண்டவர். இவரின் கவிதைகள் 
உயிர்நிழல், வார்ப்பு, பதிவுகள், திண்ணை, அதிகாலை.கொம், காற்றுவெளி, தமிழ் 
ஓதர்ஸ் மற்றும் பல இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன.

ஈழத்து இதழ்களான மல்லிகை, கலைமுகம், ஞானம், புதியதரிசனம், வெளிச்சம், 
தாயகம், செங்கதிர் மற்றும் புலம்பெயர் இதழ்களான உயிர்நிழல், எதுவரை 
போன்றவற்றிலும் தமிழகத்திலிருந்து வெளிவரும் யுகமாயினி, உயிர்மை 
ஆகியவற்றிலும் வீரகேசரி, தினகரன், நமது ஈழநாடு, உதயன், வலம்புரி, 
தினக்குரல், சுடர் ஒளி ஆகியவற்றிலும் இவரது படைப்புக்கள் வெளியாகியுள்ளன.

 

இவரது நூல்கள். மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள் - கவிதைத் தொகுப்பு, வெளியீடு: 
தினைப்புனம், யாழ்ப்பாணம், 2008

 அலைவும் உலைவும், புலம்பெயர் படைப்பிலக்கியம் குறித்த பார்வை 
(கட்டுரைகள்), வெளியீடு:- தினைப்புனம், முதற்பதிப்பு 2009

 

 இவரது கவிதையொன்று.சபிக்கப்பட்ட உலகு.மீளவும் பூச்சிகளும் பறவைகளும்

வாழும் உலகு எனக்காகச்

சபிக்கப்பட்டிருக்கிறது

எப்போதாவது ஒருமுறை வரும் வாகனத்தில்

ஒரு பயணத்திற்காகக் காத்திருத்தல்

வழமையாயிற்றுஎத்தனை முறைதான் இப்படிச் சறுக்கி விழுவது?அதிகமாக எல்லா அதிகார வர்க்கத்திற்கும்

மூளைப் பிசகு ஏற்பட்டிருக்க வேண்டும்?சீறிவரும் வாகனத்தில் இருந்து

கண்ணாடிக் கதவு இறக்கி

சுட்டுவிரல் காட்டவும்

லாபத்தில் பங்குபோடவும்

நேரம் குறித்து வருவார்கள்.

கூடவே முதுகு சொறிய

கொஞ்சம் ஒட்டியிருக்கும்.பூச்சிகளும் பறவைகளும் மிருகங்களுமே

வாழக்கூடிய வனவாசகத்தில்

பட்டரும் ஏசியும் நெற்வேர்க்கும் பயன்படுத்தலாம்

என ஆலோசனை கூறுகிறார்கள் மூளைகெட்டவர்கள்மூன்று மணித்தியாலமாக

யாரோ ஒரு நல்லவனின் வருகைக்காக

பாசிபிடித்த மதகு ஒன்றில் குந்தியிருக்கிறேன்வீதியை வெறிப்பதும்

குரங்குகளின் ஊஞ்சலை ரசிப்பதும்

பறவைகளின் கீச்சிடலும் பழக்கமாயிற்றுமழைபெய்து ஈரமாக்கிய கிரவல் மண்ணில்

மண்புழுக்கள் நெளிவதையும்

வாரடித்து ஓடிக்கொண்டிருக்கும் நீரில்

தத்தளித்துக் கொண்டிருக்கும் எறும்புகளையும்

இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன்இந்த உலகில் வாழச் சபிக்கப்பட்ட

என்னைப் பார்த்து வாலாட்டிக் கொண்டு

ஒரு கண்டன்கறுவல் வீதியைக் குறுக்கறுக்கிறது*கண்டன்கறுவல் - ஒரு வகைப் பாம்பு

· ·

  • Thevarasa Mukunthan யாழ்ப்பாணம் இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் தொடர்பற்று மூடுண்டிருந்த காலகட்டத்தை கவிதையில் பதிவு செய்ததில் துவாரகனின் பங்கு மகத்தானது. புலம் பெயர் இலக்கியம் தொடர்பான ஆய்வுகளில் இவரின் பங்களிப்பு மிகக் காத்திரமானது. எல்லாவற்றையும் விட மிக நல்ல மனிதர்.
   Yesterday at 15:24 · · 3

  • யாழ் இலக்கிய குவியம்
   ஒரு கவிதை உருவாகும் கணங்கள் மிக முக்கியமானவை என்று எண்ணுகிறேன். எமக்கு முன்னால் ஒவ்வொரு கணங்களிலும் பல நிகழ்வுகள் நிகழ்ந்தேறி வருகின்றன. எரிநெருப்பு எம்மைச் சுடுவதும், ஒரு இனிய இசை எம்மைக் கொள்ளை கொள்வதும் மாறாக எரிநெருப்பே விருப்புக்குர...ியதாக மாறுவதும், இனிய இசை எம்மை வருத்துவதும் திரும்பவும் திரும்பவும் நிகழ்ந்தேறி வருகின்றன. இவற்றில் எல்லாம் கவிதையாவதுமில்லை. சில சமயங்களில் பஸ் யன்னலூடாகப் பயணிக்கும் குழந்தையொன்று முகம் தெரியாத எம்மைப் பார்த்து கையசைப்பது போல் கவிதை எமக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தி விட்டுச் சென்றுவிடும் ---- நேர்காணல் ஒன்றில் கவிதை பற்றி துவாரகன் .See more

   Yesterday at 16:28 · · 4

  • நன்றி இலக்கியக்குவியம் மற்றும் வேலணையூர் தாஸ்.
   · 2