நவம்பர் 03, 2019

“சூழலைத் தூய்மையாக்குவோம்” விழிப்புணர்வுச் செயற்றிட்டம் -1   கெருடாவில் வாலிபர் சங்கம் (Viber group) ஏற்பாட்டில் 03.11.2019 ஞாயிறு மாலை 3.30 மணியளவில் சூழலைத் தூய்மையாக்குவோம் என்ற விழிப்புணர்வுச் செயற்றிட்டம் -1 இடம்பெற்றது. திட்டமிட்டவாறு தொண்டைமானாறு சந்தியில் அமைந்துள்ள கோணேசர் கோவில் குளம் மற்றும் பெரியகடற்கரை சந்தைப் பகுதியை அண்டிய கடற்கரைப் பிரதேசமும் இச்செயற்பாட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன.  அங்கிருந்த பொலித்தீன் பிளாஸ்ரிக் பொருட்கள் அகற்றப்பட்டன.

   இளைஞர்களை சமூகச் செயற்பாட்டாளர்களாக ஆக்கும்  இச்செயற்பாட்டுக்கு எதிர்பார்த்த இளைஞர்களின் பங்களிப்பு மிகக் குறைவாக இருந்தமை ஏமாற்றத்தைத் தந்தபோதும், சிறிய அளவிலான இச்செயற்பாட்டிற்கு பங்கெடுத்தவர்களின் செயற்பாடு எமக்கு திருப்தியளிக்கக்கூடியதாக அமைந்தது. இந்த முயற்சிக்கு வல்வை நகரசபையினரின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் கிடைத்தது கூடுதல் பலமாக அமைந்தது. இம்முயற்சியில் வல்வை நகரசபைத் தவிசாளர், ஊழியர்கள் மற்றும் நகரசவை உறுப்பினர் கமல் ஆகியோரும் பங்கெடுத்தனர்.

  பங்கெடுத்த அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதோடு “சூழலைத் தூய்மையாக்குவோம்” விழிப்புணர்வுச் செயற்றிட்டத்தின் 2 ஆவது செயற்பாட்டுக்கு அதிக இளைஞர்களின் பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம்.

ஒருங்கிணைப்பு : சு.குணேஸ்வரன்
படங்கள் : கம்சிகன்