அக்டோபர் 26, 2011

ஒரு கருத்து


கலைமுகம் 49 வது இதழ் பற்றிய குறிப்பில் தீபச்செல்வன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

"அடுத்து கவிதைகள் முக்கியம் கொள்ளுகின்றன. துவாரகனின் கவிதைகள் நம்பிக்கை தகர்ந்த பொழுதுகளை சித்திரிக்கிறது. ‘மீதமாயிருந்த கொஞ்ச நம்பிக்கையும்..’ ‘சாத்தான்களின் உலகம’; ‘நீரின் மட்டம் உயர்கிறது’ முதலிய கவிதைகள் இடம்பெறுகின்றன. கை நழுவிப்போகிற நம்பிக்கையற்ற பொழுதில்

“உடைந்த கூரைகளும்
விழுந்த மரங்களும்
சிதைந்த உடல்களும்
எம் கண் முன்னால்”

என்று இந்தக் காலத்தின் நெருக்கடியை சொல்லுகிறது இந்தக் கவிதைகள். நீரின் மட்டம் உயர்கிறது கவிதை மழை கொட்டிப் பரப்பிய வெள்ளத்தையும் காலம் விழுத்திக்கொண்டிருக்கிற துயர வெள்ளத்தையும் பாய்ச்சுகிறது."
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=346:2009-08-30-10-25-08&catid=4:reviews&Itemid=267

செப்டம்பர் 17, 2011

ஒரு பதிவுக்காக

(2009 செப்ரெம்பருக்கு முன் கிடுகுவேலி என்ற பெயரில்தான் இந்த வலைப்பதிவை வைத்திருந்தேன்.அது பற்றிய ஒரு பதிவை ஞாபகத்திற்காக இணைக்கிறேன்)


Tuesday, September 15, 2009

வலைப்பதிவு முகவரியும் பெயரும் மாற்றம்

http://kidukuvely.blogspot.com/2009/09/blog-post.htmlஇந்த முகவரியில் இயங்கிய கிடுகுவேலி வலைப்பதிவு தற்போது வல்லைவெளி என்ற பெயரில் என்ற http://vallaivelie.blogspot.com/முகவரியில் இயங்குகிறது. ஏற்கனவே கிடுகுவேலி என்ற பெயரில் ஒரு வலைப்பதிவு இயங்கி வருவதனால் இந்த மாற்றத்தை மேற்கொள்ள நேரிட்டுள்ளது. அசௌகரியங்களுக்கு வருந்துகிறேன்.

இவ்வண்ணம்

அன்புடன் துவாரகன்
Posted by துவாரகன் at 3:33 AM
3 comments:

கதியால் said...
வணக்கம் துவாரகன்...! என்னுடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி....! நிச்சயம் வல்லை வெளி என்பதும் ஒரு அருமையான பெயர். வானுயர்ந்த காட்டிடையே நானிருந்து பாடுகிறேன்...வயல்வெளிகள் மீது கேட்குமா....வல்லைவெளி தாண்டிப் போகுமா...? இன்றும் மனதில் பதிந்த ஒரு பெயர். வல்லை வெளி அல்ல எல்லோர் இதயங்களிலும் குடியிருக்கபோகின்றது என்பது மட்டும் உறுதி...! தொடர்ந்து உங்கள் படைப்புகளை எதிர்பார்த்திருக்கிறேன். நன்றாக அமைய வாழ்த்துக்கள். நன்றி..!!!!
September 16, 2009 10:49 PM

ஜூலை 24, 2011

Communication Team


நூலகம் செய்திமடல் தொடர்பாக இணைந்து செயற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவலை எனது வலைப்பதிவு நண்பர்களுடன் பரிமாறிக்கொள்வதில் மகிழ்ச்சிடைகிறேன்.

Kuneswaran
Kuneswaran contributes towards Puthiya Noolaham newsletter and other outreach activities.
Kuneswaran was born in Jaffna, Sri Lanka in 1971. He studied in Uduppiddy American Mission College. Kuneswaran received a B.A (Hons) from the University of Jaffna in 1999. He has authored two books, a poetry book and an article collection. He has also edited four other books.
He is currently working as Teacher in Chemamadu Sanmuganantha Maha vidyalayam, Vavuniya.
His interests include diaspora tamil Literature, poetry, criticism, Photography and blogs.

ஜூன் 23, 2011

ourjaffna.comயாழ்ப்பாணத்து பண்பாட்டுப் பாரம்பரியங்களை மற்றும் படைப்பாளிகள் விபரத்தை எந்த ஆரவாரமுமில்லாமல் வலையேற்றி வரும் பயனுள்ள தளம் ourjaffna.com இதை அடிக்கடி நானும் பார்த்து வருகிறேன். எனது வலைப்பதிவில் இதற்கு ஏற்கனவே ஒரு இணைப்பும் கொடுத்திருந்தேன்.

அதில் இவ்வாரம் என்னைப் பற்றிய தகவல்களையும் (விக்கிபீடியாவில் இருந்து), எனது 'சபிக்கப்பட்ட உலகு' கவிதையையும் எடுத்தாண்டு தமது பக்கத்தில் இணைத்திருந்திருக்கிறார்கள்.

மிக்க நன்றி என்ற ஒரு வார்த்தையை அந்தத் தளத்தைச் சேர்ந்த நண்பர்களுக்கு கூறிக்கொள்கிறேன். மேலதிகமாக வாசிக்க

ஜூன் 12, 2011

இனிய ஒரு பொழுது

என் டயறிக்குறிப்பிலிருந்து...
12.06.2011 அன்று நல்லூரில் நடைபெற்ற இலங்கை இலக்கியப்பேரவை விருது வழங்கும் நிகழ்வில் கவிஞர் ஐயாத்துரை ஞாபகார்த்த விருது வழங்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த கவிதை நூல்களுள் மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்ணியாவுக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துவாரகனுக்கும் (எனக்கும்)இவ்விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது. (நூல்களைத் தெரிவுசெய்தவர் நாடறிந்த கவிஞர் சோ.பத்மநாதன் என நிகழ்வின் உரையில் ஐ. வரதராஜன் தெரிவித்தார்)


(பெண்ணியாவுக்கு இலங்கை இலக்கியப் பேரவை வழங்கிய
இன்னொரு பரிசுச்சான்றிதழும் 2008 கிடைத்தது)


நிகழ்வில் வாழ்த்துரையை பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் நிகழ்த்தினார்.கவிஞர் ஐயாத்துரை ஞாபகார்த்த உரையை பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்கள் நிகழ்த்தி (உரையை பதிவு செய்து வைத்துள்ளேன். பின்னொரு சந்தர்ப்பத்தில் தருவேன்.) சான்றிதழையும் பணமுடிச்சையும் (கவிஞர்கள் இருவருக்கும் தலா ஐயாயிரம் ரூபா) வழங்கிக் கெளரவித் தார். இரண்டு கவிகள் பற்றிய அறிமுக உரையை ஐயாத்துரை வரதராஜன் நிகழ்த்தினார்.
அவ்விழாவில் சக கவிஞர் பெண்ணியாவுடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. நிகழ்வில் இறுதியில் ஐயாத்துரை குடும்ப உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். மிக்க மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தந்த நாளாக அன்றைய நாள் அமைந்திருந்தது.
-துவாரகன்
படத்தில் நண்பர் செல்மர் எமில், பெண்ணியா (தனது குழந்தையுடன்), யோகோஸ்வரி சிவப்பிரகாசம், வரதராஜன் ஆகியோருடன் எனது குடும்பம்


கவிஞர் ஐயாத்துரை குடும்ப உறவுகளுடன்

படங்கள் - வ.வித்தியும் நண்பர்களும்

மே 28, 2011

நூலகத்திட்டத்தில் எனது நூல்கள்
நூலகத் திட்டத்தில் எனது நூல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
1. அலைவும் உலைவும்http://noolaham.net/project/83/8249/8249.pdf
2. மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்http://noolaham.net/project/88/8708/8708.pdf

இணைப்பு :- http://noolaham.org/wiki/index.php?title=???????:??????????%2C_??.

மே 20, 2011

கொழும்பு சர்வதேச எழுத்தாளர் மாநாடு

கொழும்பு சர்வதேச எழுத்தாளர் மாநாட்டின்போது... அரிதான சந்திப்பின் படங்கள் சில

புதிய மொழியுடன் கூடிய வித்தியாசமான கதைசொல்லி; அளவெட்டி சிறிசுக்காந்தராசா (கனடா) அவர்களுடன்


அரிதான சிற்றிதழ் சேகரிப்பாளர் க. பட்டாபிராமன் அவர்களுடன்


மாநாட்டில் கலந்து கொண்ட எழுத்தாள நண்பர்கள் சிலருடன்


எழுத்தாளர் சுசீந்திரன்(ஜெர்மனி) அவர்களுடன்சுயபுராணம் - குணேஸ்வரன்
என்னைப் பற்றிய சுயபுராணத்தை இதில் பதிவு செய்யவிரும்புகிறேன். அவை எனது தொழில் மற்றும் கலை இலக்கியம் குறித்த பதிவாக இருக்குமென நினைக்கிறேன்.

அன்புடன்
சு.குணேஸ்வரன்

---

சு. குணேஸ்வரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துவாரகன் என்ற புனைபெயர் கொண்ட சு. குணேஸ்வரன் ஈழத்துக் கவிஞராக, விமர்சகராக, புலம்பெயர் இலக்கிய ஆய்வாளராக அறிமுகமானவர்.

பொருளடக்கம்

· 1 வாழ்க்கைக் குறிப்பு

· 2 இதழ் பங்களிப்பு

· 3 வெளிவந்த நூல்கள்

· 4 தொகுத்து வெளியிட்ட நூல்கள்

· 5 மின்நூல்

· 6 விருதுகள்

· 7 வெளி இணைப்புகள்

வாழ்க்கைக் குறிப்பு

துவாரகன் தொண்டைமானாறு, ஆரம்பக் கல்வியை கெருடாவில் இந்து தமிழ்க் கலவன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை தொண்டைமானாறுவீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்திலும் க.பொ.த உயர்தரத்தை யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியிலும் பயின்றார். பெற்றோர் சுப்பிரமணியம், கமலாதேவி.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணி (தமிழ் சிறப்பு) பட்டத்தைப் பெற்றார். '20ம் நூற்றாண்டில் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் கவிதை, புனைகதைகள்' என்ற ஆய்வுக்காக பேராசிரியர் அ. சண்முகதாசின் நெறியாள்கையில் 2006 இல் முதுதத்துவமாணிப் பட்டத்தைப் பெற்றார். தற்போது வவுனியாவில் உள்ள சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார்.

கவிதைகளுடன் விமர்சனத்திலும் ஈடுபாடு கொண்ட இவர் தொகுப்பு முயற்சிகளிலும் இறங்கியுள்ளார். இவரின் கவிதைகள் உயிர்நிழல், வார்ப்பு, பதிவுகள், திண்ணை, அதிகாலை.கொம், காற்றுவெளி மற்றும் பல இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன.

ஈழத்து இதழ்களான மல்லிகை, கலைமுகம், ஜீவநதி, ஞானம், புதியதரிசனம், வெளிச்சம், தாயகம், செங்கதிர் மற்றும் புலம்பெயர் இதழ்களான உயிர்நிழல். எதுவரை, போன்றவற்றிலும் தமிழகத்திலிருந்து வெளிவரும் யுகமாயினி, உயிர்மை ஆகியவற்றிலும் வீரகேசரி, தினகரன், நமது ஈழநாடு, உதயன் வலம்புரி, தினக்குரல் ஆகியவற்றிலும் இவரது படைப்புக்கள் வெளியாகியுள்ளன.

§ 2010 இல் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டு 'புலம்பெயர் சிற்றிதழ்களின் அரசியல்' என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வாசித்தார்.

§ 2011 சனவரி கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில்கலந்து கொண்டு "இலத்திரனியற் சூழலில் புகலிடச் சிற்றிதழ்கள்" என்னும் ஆய்வுக் கட்டுரை வாசித்தார்.

இதழ் பங்களிப்பு

தொண்டைமானாறு கெருடாவில் கலை இலக்கிய சாகரம் என்ற அமைப்பினால் கொண்டு வரப்பட்ட 'சக்தி' என்ற இதழின் ஆசிரியர்களில் ஒருவராக இருந்திருக்கிறார்.

வெளிவந்த நூல்கள்

§ மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள் - கவிதைத் தொகுப்பு, வெளியீடு தினைப்புனம், யாழ்ப்பாணம்.

§ அலைவும் உலைவும், புலம்பெயர் படைப்பிலக்கியம் குறித்த பார்வை (கட்டுரைகள்), வெளியீடு:- தினைப்புனம், முதற்பதிப்பு 2009

தொகுத்து வெளியிட்ட நூல்கள்

§ அம்மா தேர்ந்த கவிதைகள், கவிதை நூல்

§ வெளிநாட்டுக் கதைகள், சிறுகதைத் தொகுப்பு, புலம்பெயர்வாழ் தமிழர்கள் எழுதிய சிறுகதைகள்

§ கிராமத்து வாசம், குழந்தைப் பாடல்கள், வித்துவான் க. வேந்தனார் தொடக்கம் மு. பொன்னம்பலம் வரை 16 கவிஞர்கள் யாத்த 21 குழந்தைப் பாடல்களின் தொகுப்பு

§ பாட்டிமார் கதைகள் (சிறுவருக்கான நாட்டுப்புறக் கதைகள்) 20 கதைகளின் தொகுப்பு, 2010

மின்நூல்

§ சொற்கள் தவிர்க்கப்பட்ட காலம் [1]("மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்" கவிதைத் தொகுப்பின் மீதான பதிவுகள்) 2011 ஏப்ரல்

விருதுகள்

§ ”மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்” என்ற கவிதைத் தொகுப்பு 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான வடமாகாண இலக்கிய விருதினைப் பெற்றுள்ளது.

§ இலங்கை இலக்கியப் பேரவையால் வழங்கப்படும் கவிஞர் ஐயாத்துரை விருதினையும் அதே ஆண்டில் மேற்படி கவிதை நூல் பெற்றுக் கொண்டது.

வெளி இணைப்புகள்

§ துவாரகனின் வலைப்பதிவு

§ வல்லைவெளி

பகுப்புகள்: ஈழத்து எழுத்தாளர்கள் | ஈழத்துக் கவிஞர்கள்

நன்றி- கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவில் இருந்து/ 21.05.2011