டிசம்பர் 06, 2023

சங்க இலக்கியம் : வழிபாடும் நீர்ப்பண்பாடும்

சங்க இலக்கியம் : வழிபாடும் நீர்ப்பண்பாடும் - சு. குணேஸ்வரன் 



சு.குணேஸ்வரனின் சங்க இலக்கியம் வழிபாடும் நீர்ப்பண்பாடும் என்ற நூலை யாழ் புத்தகசாலைகளான வெண்பா, புக்லாப், குயின்சி ஆகியவற்றிலும் வவுனியாவில் பண்டாரவன்னியன் புத்தகசாலையிலும் பெற்றுக் கொள்ளமுடியும். 





நவம்பர் 23, 2023

குணேஸ்வரன் : இணையவெளி உரையாடல்கள்

எனது இணையவெளி உரையாடல்களை இங்கு இணைத்துள்ளேன். 


சோலைக்கிளியின் 'தண்ணீருக்கு எத்தனை கண்கள்' : உரை - சு. குணேஸ்வரன்



வ.ஐ.ச ஜெயபாலனின் பெருந்தொகை : உரை - சு. குணேஸ்வரன்



ஆழியாளின் கவிதைகளில் புனைதிறன் : உரை - சு. குணேஸ்வரன்



டெம்சுலா ஆவ்வின் "என் தலைக்குமேல் சரக்கொன்றை" : உரை - சு. குணேஸ்வரன்



பாமாவின் எழுத்துலகம் : ஒருங்கிணைப்பு - சு. குணேஸ்வரன் 



வ.ந.கிரிதரனின் 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' : உரை - சு. குணேஸ்வரன்



ஐ.சாந்தனின் சித்தன் சரிதம் : ஒருங்கிணைப்பு - சு. குணேஸ்வரன் 


குந்தவையின் சில சிறுகதைகள் : உரை - சு.குணேஸ்வரன்



தேவகாந்தனின் நான்கு நூல்கள் விமர்சன அரங்கு : ஒருங்கிணைப்பு - சு. குணேஸ்வரன் 


இலக்கியவெளி இதழ் 1 (ஜானகிராமன் சிறப்பிதழ்) உரை : சு. குணேஸ்வரன்




நவம்பர் 07, 2023

வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளையின் நாடகப்பிரதிகள் : பன்முகப் பார்வை



(இவ்வருடம் (2023) வெளிவந்துள்ள எனது இரண்டு புதிய நூல்களில் இதுவுமொன்று. நூல் தொடர்பாக நண்பர் கு. றஜீபன் எழுதிய வாழ்த்துக் குறிப்பினை இணைத்துள்ளேன்.- சு. குணேஸ்வரன் )

தமிழியல் ஆய்வு நடுவகத்தால் "சமகால இலக்கிய முயற்சிகள்" எனும் தலைப்பில் இந்த ஆண்டு ஒர் ஆய்வரங்கு நடாத்தப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு அம்மாவட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வாக அது நடாத்தப்பட்டது. அதில் கலாநிதி சு.குணேஸ்வரன் அவர்கள் வல்லிபுரம் எழுமலைப்பிள்ளையின் படைப்புகள் பற்றிய ஆய்வினை சமர்ப்பித்திருந்தார்.

ஏழுமலைப்பிள்ளையவர்கள் யாழ்ப்பாணம் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் கிளிநொச்சியை வாழ்விடமாகவும் கொண்ட ஒரு கலைஞர். 2010 ஆம் ஆண்டு எனது முதல் நியமனத்தில் கிளிநொச்சியில் உள்ள கரைச்சி பிரதேச செயலகத்தில் கலாசார உத்தியோகத்தராகக் கடமை ஏற்றபோது அறிமுகமானவர்தான் ஏழுமலைப்பிள்ளை. அமைதியான சுபாவமுடைய ஒரு கலைஞராகவே எனக்கு அறிமுகமானார். பின்னர் அவருடனான உரையாடல் மூலம் அவரது வாசிப்புப் பழக்கத்தினையும் அவரது வசன ஒழுங்குகளையும் கண்டு அதிசயித்தேன்.
அப்போது அவர் எழுதிய சில நாடகப்பிரதிகளை எனக்குக் காண்பித்தார். நல்ல மொழிநடையாக இருந்த அந்த நாடகப்பிரதிகளை ஒரு நூலாக வெளியிடவேண்டும் என்ற சிந்தனையை முன்வைத்தேன். பொருளாதாரம் அவருக்கு இடந்தராமையினை அறிந்து எமது திணைக்கள நிதியிலும் நலன் விரும்பிகளின் அநுசரணையிலும் அவரது முதலாவது நூலை வெளிக்கொணர்ந்தேன்.
நல்ல எழுத்தாற்றல் அவரிடம் இருப்பதைக் கண்டு தொடர்ந்து எழுதும்படி தூண்டினேன். அவரும் ஆர்வங்கொண்டு தொடர்ந்து எழுதினார். நான் பணியாற்றிய காலத்தில் அவரது மூன்று நூல்களை வெளியிட்டு வைத்திருக்கின்றேன். ஏழுமலைப்பிள்ளையின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்ததோடு அவரது நூல்களுக்கு மாகாண, தேசிய மட்டத்தில் சிறந்த நூலுக்கான பரிசில்களும் கிடைத்தன. நான் பணியாற்றிய காலத்தில் இலைமறைகாயாக இருந்த ஒர் எழுத்தாளனுக்கு சந்தர்ப்பங்கள் வழங்கி அவரை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறேன் என்ற பெருமை எனக்கு இருந்தாலும் மனதில் ஒரு குறை இருந்தது. இன்று ஐந்து நூல்களுக்கு மேல் ஆக்கியிருக்கும் இவரது படைப்புக்களை ஆய்வுக்கு உட்படுத்தி ஒர் ஆய்வாளனின் அங்கீகாரத்தினைப் பெறவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதனை தமிழியல் ஆய்வு நடுவகம் ஊடாக நிறைவேற்ற முடிந்தது.
ஒரு நல்ல ஆய்வாளன் ஊடாக இவரது படைப்புக்களை அணுகவேண்டும் என்று சிந்தித்தபோது பலரும் கூறிய ஆய்வாளர்தான் கலாநிதி சு.குணேஸ்வரன். எமது ஆய்வு மற்றும் மதிப்பீட்டுக்குழுவின் தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களும் குணேஸ்வரனின் பெயரினையே முன்மொழிந்திருந்தார். அதற்கமைவாக சுமார் இரண்டு மாதகால அவகாசத்தில் இந்த ஆய்வினை மேற்கொள்ளும் பொறுப்பு குணேஸ்வரனுக்கு வழங்கப்பட்டபோது முதலில் தயங்கி, பின்னர் ஏற்றுக்கொண்டார்.
ஒர் ஆய்வாளன், படைப்பாளன் பற்றியும் அவரது படைப்புக்கள் பற்றியும் ஏலவே படித்திருந்த பின்பே ஆய்வினை மேற்கொள்வான். ஆனால் நான் இந்த ஆய்வுப் பொறுப்பினை குணேஸ்வரனிடம் வழங்கியபோது அவர் படைப்பாளன் பற்றியோ அவரது படைப்புக்கள் பற்றியோ அறிந்திருக்கவில்லை. அத்துடன் குணேஸ்வரனுக்கு இதுவொரு புதிய துறையாகவும் இருந்தது. நாடக எழுத்துரு மற்றும் ஆன்மீகம் என்ற துறைகளிலேயே ஆய்வுசெய்யவேண்டியிருந்தது. இந்தச் சவாலை துணிவுடன் ஏற்றுக்கொண்டு சிறந்தவொரு ஆய்வுக்கட்டுரையினை மாநாட்டில் சமர்ப்பித்திருந்தார். இப்போது அது நூலுருவாக வெளிவருவது மகிழ்ச்சிக்குரியது.
ஒர் ஆய்வு மூலையில் முடங்காமல் அது வாசகர் மத்தியில் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் குணேஸ்வரன் எடுத்திருக்கும் இந்த முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்
சைவப்புலவர் கு.றஐீபன் M.A
நிறைவேற்றுப் பணிப்பாளர்,
தமிழியல் ஆய்வு நடுவகம்,
யாழ்ப்பாணம்.

ஆகஸ்ட் 07, 2023

அனலைதீவு இலக்கியச் சந்திப்பில்...

 அனலைதீவில் நடைபெற்ற 50 ஆவது இலக்கியச் சந்திப்பில் இலக்கிய நண்பர்களுடன்

மேலும் இங்கேயும்  நிகழ்வுப் படங்கள் உள்ளன. 




















ஜூன் 03, 2023

கிளிநொச்சி ஆய்வரங்கு

 23.05.2023 இல் கிளிநொச்சியில் நடைபெற்ற ஆய்வரங்கிலிருந்து... (ஒளிப்படங்களுக்கு நன்றி :அகில்)









ஒரு கவிதை

 நவலிய சிங்களப் பத்திரிகையில் (01.05. 2023) துவாரகனின் கவிதையாகிய "வெட்டுக்கிளிகளின் நூற்றியெட்டுக் கதைகள்' வந்துள்ளது. சிங்களத்தில் மொழிபெயர்த்த இப்னு அஸூமத் அவர்களுக்கும் கபில எம். கமகே அவர்களுக்கும் & நவலிய பத்திரிகைக்கும் மிக்க நன்றி.



மே 13, 2023

கற்றல் காணொளிகள்

 தமிழ்ப்பாடம் தொடர்பாக  மாணவர்களுக்காக என்னால் மேற்கொள்ளப்பட்ட கற்றல் காணொளிகள். குருகுலம், நெனச, LMDM முதலான இணையப்பக்கங்களில் இருந்து இங்கு இணைக்கப்படுகிறது.



க.பொ.த உயர்தரம் : தமிழ் - குயிற்பாட்டு 


க.பொ.த உயர்தரம் : தமிழ் - பாரதிதாசன் கவிதை உதயசூரியன் 



தரம் 6

தரம் 6 - குறும்பா






தரம் 7 



தரம் 7 கடலும் கிணறும்



தரம் 9 





தரம் 10








தரம் 11

தரம் 11 பெயர்ச்சொல் வேறுபாடுகள்





தரம் 12 தமிழ் - மாற்றொலிகள்


தரம் 13 தமிழ் - தேம்பாவணி காட்சிப்படலம் 




தரம் 13 தமிழ் - தொடரியல் 


தரம் 13 தமிழ் - உரிச்சொல் 




தரம் 12 தமிழ் - பதவியல் 


தரம் 12 தமிழ் - சங்கச் செய்யுள்


தரம் 12 தமிழ் - வேற்றுமை



தரம் 12 தமிழ் - ஆரியச்சக்கரவர்த்திகளுக்கு முற்பட்ட காலம் 


தரம் 13 தமிழ் - கட்டுரையாக்கம் 



தரம் 13 தமிழ் சிறுகதை : எனக்கு வயது பதின்மூன்று 




தரம் 13 தமிழ் : மணிமேகலை (மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை) 



தரம் 13 தமிழ் : வேந்தனார் கவிதை - கவிஞன் 


 
தரம் 13 தமிழ் : சிறுகதை - நெருக்கடி 



தரம் 12 தமிழ் : கிரகித்தல் 





ஜனவரி 27, 2023

அஞ்சலி: வேலுப்பிள்ளை பரமானந்தம்



எங்கள் தலைமுறையின் வழிகாட்டி

னது ஆசானும் சமூக முன்னோடியும் பருத்தித்துறை ப.நோ.கூ.ச முன்னாள் வர்த்தக முகாமையாளருமாகப் பணியாற்றிய அன்புக்குரிய வே. பரமானந்தம் (விசயண்ணா) அவர்களின் பிரிவு இன்று (15.12.2022) நிகழ்ந்தது.

கெருடாவிலில் படித்த தலைமுறைகளை உருவாக்குவதில் முன்னோடியாகச் செயற்பட்டவர்களில் ஒருவர் வே.பரமானந்தம் அவர்கள். சமூகத்தின் பலதரப்பட்டவர்களும் பல்வேறு துறைகளில் மிளிர்ந்த காலம். எமது கிராமத்தின் தாய்ச்சங்கமாக இருந்த விவேகானந்தா சனசமூக நிலையத்தை மையப்படுத்திய சமூகச் செயற்பாடுகள் பலதரப்பட்டவை. கல்வி நடவடிக்கைகள், விளையாட்டுச் செயற்பாடுகள், கலைச்செயற்பாடுகள். குறிப்பாக, சமூக நாடகங்களுக்கு ஊடாக திராவிடக் கருத்துக்களும் ஒழுக்க விழுமியங்களும் தனிமனித முன்னேற்றம் குறித்த கருத்துக்களும் மக்களுக்குப் பரப்பப்பட்ட காலம். ஒருபுறம் மக்களின் உள்ளூர் உற்பத்தியை, சேமிப்பை ஊக்கப்படுத்தும்; சர்வோதயம், சிக்கன கூட்டுறவுச் சங்கங்கள் இயங்கிய காலம். கோயில் திருவிழாக் காலங்களில் கூட வானுயர்ந்த சிகரங்களை நான் சிறுவனாக இருந்தபோது பார்த்திருக்கிறேன். இப்போது அவை கனவுபோல் உள்ளன. இந்தக் காலங்களில் எல்லாம் பரமானந்தம் அவர்களின் கைகளும் இணைந்திருந்தன.
கிராமத்திற்கு மின்சார வசதி இல்லாத காலம். ரியூசன் முடிய இரவாகிவிடும். 'அரிக்கன் லாம்பு' வெளிச்சத்தில் எங்களை ஒவ்வொருவராக வீடுகளில் சேர்ப்பித்து தனது வீடு சென்ற காலங்கள் நினைவை மீட்டுகின்றன.

நாங்கள் வளர்ந்து உயர்தர வகுப்புகளில் கற்றபோது எங்களையும் தனது அடுத்தகட்ட நகர்வுக்குத் தயார்ப்படுத்தினார். நான் சபைமுன் பேசப்பழகியது மற்றுமொரு களமாகிய அண்ணா சனசமூக நிலையத்தில். இலக்கிய ஈடுபாட்டை வளர்த்தது வேறொரு களத்தில். பட்டிமன்றங்கள் என்றால் அவரின் தலைமையில் கூடுவோம். ரியூசன்களை நடத்தினோம். நாடகங்கள் நடித்தோம். கலை இலக்கிய சாகரம் என்று ஓர் இலக்கிய அமைப்பை உருவாக்கி அதற்கூடாக 'சக்தி' என்ற சஞ்சிகையை வெளியிட்டோம். எல்லா இடத்திலும் அவர் இருந்தார். வழிப்படுத்தினார். சமூக நிகழ்வுகளில் அவரின் கணீரென்ற கம்பீரமான குரல் எல்லோரையும் வசீகரிக்கும்.

அவரிடம் கற்ற எனது வயது தோழரும் தோழியரும் இன்று பல தொழில்களை ஆற்றுகிறார்கள். ஆசிரியர்களாக நிர்வாக உத்தியோகத்தர்களாக இருக்கிறார்கள். எங்கள் அடுத்த தலைமுறைகள் சிறப்பாகக் கற்கிறார்கள். அவரின் ஐந்து பிள்ளைகளும் நன்றாகக் கற்றார்கள்.அரச பணிகளில் இருக்கிறார்கள்.

இன்று காலம் மாறிவிட்டது. செய்த நன்மைக்கு நன்றிகூடச் சொல்ல மாட்டார்கள். கைத்தொலைபேசிக்குள் ஓர் உலகத்தை சிருஷ்டித்துக்கொண்டு மனித மனங்களைப் புறக்கணிக்கிறார்கள். புரளி பேசுகிறார்கள். சுயநலவாதிகளாக இருக்கிறார்கள். பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் தொலைத்துவிட்டு எது நல்லது எது கெட்டது என்பதுகூடத் தெரியாத அப்பாவிகளாக இருக்கிறார்கள். இவைதான் இன்றைய அதிகமான கிராமங்களின் நிலையாக இருக்கிறது.இந்த இடத்தில் தான் எனக்கு பரமானந்தம் அவர்களின் அர்ப்பணிப்பான சேவையும் அளப்பரிய சமூகப்பணியும் பெரிதாகத் தெரிகிறது.

ஒரு கல்வி கற்ற சமூகத்தை உருவாக்க பரமானந்தம் போன்றவர்கள் கைகாட்டி விட்ட பாதை இன்னமும் எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. அந்தப் பாதையில் அவர் இன்னமும் எங்களை வழிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
ஆழ்ந்த அஞ்சலிகள் ஆசானே!

- கலாநிதி சு. குணேஸ்வரன்