தமிழ் விக்கிபீடியாவில் எனது பங்களிப்பு வரிசையில்....சைவப்பெரியார் கா. சூரன்
http://tawp.in/r/35n3கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைவப்பெரியார் கா. சூரன் (ஆகத்து 1, 1881 - 1956) இலங்கையின் வடக்கே வடமராட்சியில் அமைந்துள்ள தேவரையாளி சைவ வித்தியாசாலையின் நிறுவனராகவும் முதல்வராகவும் இருந்தவர். இவர் ஒரு சமூக முன்னோடியுமாவார். பதிகங்கள் பாடுவதிலும் கவியாற்றுவதிலும் வல்லவர். முற்போக்கு எண்ணம் கொண்டவர்.
பொருளடக்கம் [மறை]
1 வாழ்க்கைச் சுருக்கம்
2 சமூகப்பணிகள்
3 தொடர்பான பதிவுகள்
3.1 சைவப்புலவர் சூரன் எழுதியவை
3.2 ஏனையவர்கள் எழுதியவை
4 நினைவுச்சின்னம்
5 மேற்கோள்கள்
6 வெளியிணைப்புக்கள்
[தொகு]வாழ்க்கைச் சுருக்கம்
1881 ஆம் ஆண்டு ஆவணி மாதம் கரவெட்டியில் பிறந்தார். தந்தையார் வே. காத்தார், தாயார் வள்ளி ஆகியோருக்கு மூத்த புதல்வனாகப் பிறந்தார். கரவெட்டியில் இருந்த உவெசுலியன் மிசன் கிறித்தவப் பாடசாலையில் 5 ஆம் வகுப்புவரை கல்வி கற்றார். 1917 இல் வதிரியில் மாணிக்கம் என்பவரை மணஞ் செய்தார். பிள்ளைகள் மகள் சிவபாக்கியம், மகன் ஏகாம்பரம்.
[தொகு]சமூகப்பணிகள்
தேவரையாளி சைவவித்தியாசாலையின் நிறுவனர். தேவரையாளி ஆரம்பப் பாடசாலையை வதிரி ‘வண்ணஞ்சீமா’ என்ற காணியில் சிறு கொட்டிலில் தொடக்கி பின்னர் 1917 இல் தற்போது அமைந்திருக்கும் இடத்தில் பிரவேசம் செய்வித்தார். 1919 இல் பாடசாலை பதிவு செய்யப்பட்டது.
1923 ஆம் ஆண்டில் வதிரியில் அண்ணமார் கோவிலில் நடைபெற்ற ஆடு பலியிடுதலை சைவப்பெரியார் சூரன் பலிபீடத்தில் தன் தலையை வைத்து ஆட்டை வெட்டுவதற்க்கு முன்னர் தன் தலையை வெட்டுங்கள் எனக் குரல் கொடுத்து அந்த ஊரில் பலியிடுதலை நிறுத்திவைத்தார்[1]. அதன் பின்னர் அந்த அண்ணமார் கோவில் பிள்ளையார் கோவிலாக மாறியது. இந்த நிகழ்வுகள் பற்றி பேராசிரியர் கா. சிவத்தம்பி பல இடங்களில் எழுதியிருக்கிறார்.
[தொகு]தொடர்பான பதிவுகள்
[தொகு]சைவப்புலவர் சூரன் எழுதியவை
பராசக்தி படவிமர்சனம் – சுதந்திரன் பத்திரிகையில் பிரசுரமானது. இது எட்டுப்பக்கங்களைக் கொண்ட சிறிய பிரசுரமாகவும் 1953 இல் 15 சத விலையில் வெளிவந்தது. பராசக்தி படவிமர்சனம் என்ற பெயரில் அமரர் வல்லிபுரம் கந்தசாமி நினைவு வெளியீடாக 10.03.2004 இல் மீளவும் வெளியிடப்பட்டது.
மகாத்மா காந்தி மறைந்தபோது அவர் மீது பல இரங்கற்பாடல்களை எழுதியவர்.
சூரன் சுயசரிதை (பதிப்பாசிரியர்: ராஜ சிறீகாந்தன், 2004, பக்கம் 148.
[தொகு]ஏனையவர்கள் எழுதியவை
சூரனின் நினைவுதினத்தில் வெளியிடப்பட்ட ‘கல்வெட்டு’
கல்கி "இலங்கையில் ஒரு வாரம்" என்ற கட்டுரையின் 8 ஆம் அத்தியாயத்தில் சைவப்பெரியார் சூரன் பற்றியும் அப்போது இலங்கையில் நிலவிய தீண்டாமை பற்றியும் 08.09.1950 இல் வெளிவந்த கல்கி இதழில் எழுதியுள்ளார்.
[தொகு]நினைவுச்சின்னம்
சைவப்பெரியார் சூரன் சிலை தேவரையாளி இந்துக்கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இவ்வுருவச் சிலைக்கு 06.02.2004 இல் அப்போதைய அதிபர், மா. குட்டித்தம்பி அடிக்கல் நாட்டினார். வடமராட்சி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளராக இருந்த வி. அருளானந்தம் 14.06.2004 இல் சூரன்சிலையை திறந்து வைத்தார்.
[தொகு]மேற்கோள்கள்
↑ வதிரி பூவற்கரையான்
[தொகு]வெளியிணைப்புக்கள்
நூலகம் திட்டத்தில் சூரன் சுயசரிதை
சூரன் எழுதிய பராசக்தி படவிமர்சனம்
பகுப்புகள்: 1881 பிறப்புகள்1956 இறப்புகள்இலங்கையின் சைவப்பெரியார்கள்