அக்டோபர் 29, 2017

மாணவர் மன்ற கௌரவிப்பு விழா



உடுப்பிட்டி நாவலடி மாணவர் மன்றம் - கல்வி மன்றம் நிகழ்த்திய பரிசளிப்பு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் 08.10.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு இடம்பெற்றது. கு. மனோகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கலாநிதி சு. குணேஸ்வரன் கலந்து கொண்டார். நிகழ்வில் மன்ற ஆசிரியர் கௌரவிப்பு, பரீட்சைகளில் திறமையெய்திய மாணவர் கௌரவிப்பு, கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.

நிகழ்வுகளில் இருந்து சில ஒளிப்படங்கள்












பிரதிபா பிரபா விருது பெற்றபோது...




28.10.2017 அன்று யாழ் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க. சர்வேஸ்வரன் அவர்களிடமிருந்து மாகாண மட்டத்திலான "குரு பிரதிபா பிரபா" நல்லாசிரியர் விருது - 2017 பெற்றுக்கொண்டபோது.


(சு.குணேஸ்வரன், சிவலிங்கம், ஆ. பிரபானந்தன், தவநாயகம் )


(ஜெயகௌரி குணேஸ்வரன், சு.குணேஸ்வரன், ஆ. பிரபானந்தன்) 

(சி. வசந்தகுமார், உதயரூபன் - அதிபர், இரா. சிறீநடராசா - அதிபர், சு.குணேஸ்வரன்) 



பதிவும் படங்களும் :சு.கு 

செப்டம்பர் 23, 2017

தமிழ்மொழியும் இலக்கியமும் – வடமராட்சி வலயக் கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்த மாணவர் முகாம்



க.பொ. த (சா த) 2017 இல் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களில் தெரிவுசெய்யப்பட்ட ஒரு தொகுதி மாணவர்களுக்கான மாணவர் முகாம் (செப்ரெம்பர் 2017) 22 மற்றும் 23 ஆந் திகதிகளில் வடமராட்சி வலயக் கல்வி அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. வேலாயுதம் ம. வித்தியாலயம், வல்வை சிவகுரு வித், இமையாணன் அ.த.க.பாடசாலை, அல்வாய் சிறீலங்கா, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், உடுத்துறை ம. வித்தியாலயம், அம்பன் அ.மி.த.க பாடசாலை ஆகிய 7 நிலையங்களில் 300 வரையான மாணவர்களை ஒன்றிணைத்து இரண்டு நாள் பயிற்சியினை வழங்கியது. இதில் இமையாணன் அ.த. க பாடசாலையில் இடம்பெற்ற (மாணவர் முகாம்) கருத்தரங்கில் இருந்து சில ஒளிப்படங்கள்.
(படங்களும் பதிவும் : சு.குணேஸ்வரன்)









பிப்ரவரி 02, 2017

என் பத்துவயது நினைவுகளில் ஊறியிருந்த 'பெரிய கடற்கரை' இப்போதும் அழகுதான்




என் பால்யவயது நினைவுகளில் ஒரு கனவுக்காட்சிபோல் மிதந்துகொண்டிருக்கும் என் கிராமத்தின் வனப்பு மிகுந்த இடங்களில் என்னால் மறக்கமுடியாத இடங்களில் ஒன்று தொண்டைமானாறு பெரிய கடற்கரை. அதிகாலையிலேயே களைகட்டும் பெரிய கடற்கரை சந்தை. அதன் அருகிலேயே கடலையும் மணலையும் தொட்டு நிற்கும்அந்தக்கால பழுதடைந்த பெரிய இயந்திரப்படகு. தெற்கிலிருந்து கடலைநோக்கி ஓடிக்கொண்டிருக்கும் மழைநீர் தேங்கிய வாய்க்கால். அதில் தென்னோலைகளை ஊர்மக்கள் ஊறப்போட்டிருக்கும் காட்சி. பனையோலை மூரியாலும் தென்னோலைகளாலும் அடைக்கப்பட்ட காணிகள். வருடத்தில் ஒருமுறை வீரகாமாளி அம்மன் ஆலயத்தின் விசேட திருவிழாவும் மின்வெளிச்சத்தின் அலங்காரங்களும். அந்தத்திருவிழாவுக்காக பெரியவர்களால் கட்டப்பட்ட கயிற்றுக்கு அப்பால் மணலில் கிடைத்த சிறிய ஊரிக்கற்களைப் பொறுக்கி நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் எறிந்து விளையாடிய ஞாபகங்கள்.

அந்த இடமே இப்போ அடியோடு மாறிவிட்டாலும் பெரிய கடற்கரை தன் அழகை மட்டும் ரகசியமாக தேக்கி வைத்திருக்கிறது. அண்மையில் எனது ஆசிரிய நண்பர் ஒருவர் கேட்டார், "இப்படி ஒரு அழகான இடத்தை எங்களுக்குக் காட்டாமல் மறைத்தா வைத்திருந்தீர்கள்" என்று!
-சு.குணேஸ்வரன் -