மார்ச் 27, 2015

எனது இரண்டு கவிதைகள்
கவிஞர் சோ. ப அவர்கள் மொழிபெயர்த்து வெளியிட்ட Sri Lankan Tamil Poetry – An Anthology என்ற ஈழக்கவிகளின் 67 கவிதைகள் அடங்கிய நூல் வெளிவந்துள்ளது. அத்தொகுப்பில் என்னுடைய இரண்டு கவிதைகளும் உள்ளடங்கியுள்ளன. 'தூக்கணாங்குருவிக்கூடு', 'ஒரு மரணம் சகுனம் பார்க்கிறது' ஆகிய இரண்டு கவிதைகளும் "The weaver’s nest", "Death lurks" என கவிஞர் சோ. ப அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. முதல் முதலில் ஆங்கிலத்திற்கு எனது கவிதைகளை மொழிபெயர்த்த கவிஞர் சோ. ப அவர்களுக்கு நன்றியும் அன்பும்.