பிப்ரவரி 21, 2013

எனது சென்னைப் பயணம்


- சு. குணேஸ்வரன் 

ய்வுமாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு இரண்டாவது தடவையாகவும் சென்னைக்குச் செல்லும் வாய்ப்பு ஒன்று அண்மையில் கிடைத்தது. 


உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் “அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள்” என்ற பொருளில் தேசியக் கருத்தரங்கு ஒன்றினை சென்னை தரமணி என்ற இடத்தில் பெப்ரவரி மாதம் 14 மற்றும் 15 ஆந் திகதிகளில் ஏற்பாடு செய்திருந்தது. 

இதற்கான அறிவித்தலும் ஆய்வுக் கட்டுரைகளுக்கான வேண்டுதலும் குறுகிய காலத்தில் கிடைத்தன. அப்போது எனது வாசிப்பில் இருந்த எஸ். ஏ. உதயனில் நாவல்கள் பற்றிய கட்டுரை ஒன்றை எழுதும் விருப்பம் இருந்ததால் “அண்மைக்கால இலங்கைப் படைப்புக்களில் எஸ்.ஏ உதயனின் நாவல்கள்” என்ற கட்டுரையை அனுப்பி வைத்தேன். அதனை அந்த நிறுவனத்தினர் ஏற்றுக்கொண்டு அழைப்பு விடுத்தனர்.

குறிப்பாக இலங்கையில் இருந்து பத்துப்பேர் இம்மாநாட்டில் கலந்து கொண்டோம். பேராசிரியர் செ. யோகராசா, பேராசிரியர் துரை மனோகரன், கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ் உட்பட; நானும் நண்பர் அஜந்தகுமாரும் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்றிருந்தோம்.

இந்தப் பயணத்தில் பல எழுத்தாளர்களைச் சந்திந்து உரையாடும் வாய்ப்பும், ஆய்வு நூலகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களையும் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. எமது பயணத்தின்போது எடுத்துக்கொண்ட ஒரு தொகுதிப் படங்களைத் தருகிறேன்.
- சு. குணேஸ்வரன். 

பேராசிரியர் செ.யோகராசா, பேராசிரியர் துரை மனோகரன்

நாங்கள் தங்க வைக்கப்பட்ட விருந்தினர் விடுதி

ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் 
ஒரு நூல் வெளியீட்டு நிகழ்வின்போது 
புத்தக விற்பனையும் இடம்பெற்றது.



நிகழ்வு நடைபெற்ற 
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினரின் அலுவலகத்தில் 
அவர்கள் வெளியிட்ட வெளியீடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கவிஞர் தீபச்செல்வனுடன் 



நிகழ்வின் ஒரு அமர்வுக்கு தலைமை தாங்கிய 
பேராசிரியர் செ. யோகராசா




நிறுவன இயக்குனருடன் 
இலங்கையில் இருந்து சென்ற பேராளர்கள்.







டாக்டர் பொற்கோ அவர்களுடன் 

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வு மாணவர்களுடன் 

முதுபெரும் எழுத்தாளர் எஸ்.பொ அவர்களுடன் 


எஸ்.பொ அவர்களுடன் ஒரு காலைச்சாப்பாடு



எஸ்.பொவின் மித்ர அலுவலகத்தில் 'யுகமாயினி' சித்தனுடன். 


'யுகமாயினி' சித்தனுடன். 

 'தளம்' சிற்றிதழ் ஆசிரியர் பாரவி அவர்களுடன்

 தவத்திரு தனிநாயக அடிகளார் பிறப்பு நூற்றாண்டு தொடக்கவிழா 16.02.13 இல் சென்னை லொயோலா கல்லூரியில் இடம்பெற்றவேளை


 விருபா குமரேசனுடன்.

 மகாகவி பாரதி தன் இறுதிக்காலத்தில் வாழ்ந்த 
திருவல்லிக்கேணி நினைவில்லத்தில்.




 பாரதி உலாவிய திருவல்லிக்கேணி தெருவில்

 திருவல்லிக்கேணி கேயில்











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக