ஆகஸ்ட் 12, 2012

என்னைப் பற்றி - கு. றஜீபன்


யுத்தத்திற்குப் பின்னரான யாழ்ப்பாணத்துக் கவிதை முயற்சிகள்! என்ற கட்டுரையில் கு. றஜீபன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

"1996 காலப்பகுதியில் கவிதை உலகில் பிரவேசித்தவர் குணேஸ்வரன். இவர் துவாரகன் என்ற பெயரில் கவிதைகள் எழுதி வருகின்றார். 2008ம் ஆண்டில் வெளியிடப்பட்ட “மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள்” என்ற கவிதைத் தொகுப்பின் மூலம் நன்கு அடையாளம் காணப்பட்டவராக விளங்குகிறார். கவிதைத் தளத்தில் சொற்சேர்க்கைகளும் அது இயல்பாக வந்துவிழும் ஒழுங்கமைவிலுமே நல்ல கவிதை பிறக்கமுடியும் அப்படிப்பட்ட கவிதைகள் துவாரகனுடையவை. யுத்தத்திற்குப் பின்னரான கவிதை முயற்சியிலும் எழுதிவருகின்றார். மல்லிகை, புதிய உலகம், சக்தி, தூண்டி, புதிய தரிசனம், உயிர் நிழல், கலைமுகம், ஜீவநதி, தாயகம், கலைக்கதிர் போன்ற சஞ்சிகைகளிலும் உதயன், சஞ்சீவி, நமது ஈழநாடு, தினக்குரல், சவிதைச்சாரம், தேடல் திருவுடையாள் போன்ற பத்திரிகையிலும் எழுதி இருக்கிறார். இவற்றைவிட இன்று பெரும்பாலும் இணைய சஞ்சிகைகளிலேயே அதிகம் எழுதி வருகின்றார். யுத்தம், யுத்த அவலம், தமிழர் இருப்பு நிலைதொடர்பான அலசல்களாக இவரது அண்மைய படைப்புக்கள் விளங்குகின்றன. யாழ்ப்பாணத்துக் கவிதை முயற்சியில் குறிப்பிடக்கூடியவராக விளங்குகிறார்"


கட்டுரையை மேலும் வாசிக்க  
http://eathuvarai.net/?p=1011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக