ஏப்ரல் 19, 2012

விக்கிபீடியாவில் எனது பங்களிப்பு வரிசையில் ஆனந்தமயில்




ஆனந்தமயில்http://tawp.in/r/354r

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த. ஆனந்தமயில், ஒரு ஈழத்து எழுத்தாளர். (தோற்றம் : நவம்பர் 081947 மறைவு : மார்ச் 11,2012சிறுகதைகவிதைகுறுநாவல்,நாடகங்கள்மொழிபெயர்ப்புக்கள், சிறுவர் பாடல்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். 1995 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு விபத்தின் போது ஏற்பட்ட தாக்கத்தால் இவர் நடையை இழந்தார். பின்னர் 2012 ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று காலமானார்.

பொருளடக்கம்

  [மறை

[தொகு]கல்வி

ஆரம்பக்கல்வியை யா/கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலத்திலும் இடைநிலைக் கல்வியை யா /நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம் மற்றும் கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரியிலும் கற்றார். உயர் தரத்தை வல்வை சிதம்பராக் கல்லூரியில் கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாகப் பயின்று 1947 இல் கலைமாணிப் பட்டம் பெற்றார்.

[தொகு]குடும்பம்

மனைவி நகுலேஸ்வரி, பிள்ளைகள் தீபவர்ணன், தாமரைவர்ணன், நிரூபவர்ணன்(மறைவு), நித்திலவர்ணன், ரூபவர்ணன், ஜீவவர்ணன், முல்லைத்திவ்யன், வர்ணாம்பாள்

[தொகு]தொழில்

எழுதுவினைஞராக பணிபுரிந்தார். கொழும்பு பரீட்சைத் திணைக்களத்திலும்; மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், அனுராதபுரம், நுவரெலியா, முல்லைத்தீவு ஆகிய கல்வித்திணைக்களங்களில் பணியாற்றினார். இறுதியாக பருத்தித்துறை வலயக் கல்வி அலுவலகத்திலும் கரவெட்டி கோட்டக்கல்வி அலுவலகத்திலும் பணியாற்றினார்.

[தொகு]எழுத்துப்பணி

சிறுகதை
ஒரு எழுதுவினைஞனின் டயறி என்ற சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது. இத்தொகுதியில் ஒற்றைக்கால்கோழி, முருகைக்கற்பூக்கள், காக்காச்சி கரிமகளே, திருவிழா, ஓர் எழுதுவினைஞனின் டயறி, வாழும் வெளி, ஒரு கட்டுமரம் காத்திருக்கிறது, கொலுமீட்பு, விதி, கலை வந்தபோது, விளக்கீடு ஆகிய 12 சிறுகதைகள் உள்ளன.
“சோகம் நிரம்பி யாத்திரை” என்ற சிவனெளிபாதமலை பயணம் பற்றி இவர் எழுதிய சிறுகதை அச்சுருப்பெறாத நிலையில் தொலைந்துவிட்டது.
கவிதை
‘வீச்சுவலைக்காரனும் மாதுளம் பிஞ்சுகளும்’ என்ற அச்சுருப்பெறாத கவிதைத்தொகுதியும், தொகுக்கப்படாத பல கவிதைகளும் உள்ளன. இவை இன்னமும் நூலுருப் பெறவில்லை.
குறுநாவல்
இவர் ‘அம்மாவரை அவன்’ என்ற குறுநாவலை எழுதியுள்ளார். இது 2012 இல் வெளிவந்த “நினைவிலிருந்து சொற்களுக்கு”என்ற தொகுப்பில் உள்ளது.
நாடகம்
இவர் எழுதிய ‘சீதனம்’ என்ற நாடகம் 1980-1981 காலப்பகுதியில் பொலிகை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தால் மேடையேற்றப்பட்டது. இவரது ‘வாக்குறுதி’, ‘எதற்குமோர் எல்லையுண்டு’ ஆகிய நாடகங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. செல்லச்சாமியின் ‘விடுதலைக்கோர் பார்வை’ என்ற நாடகத்தில் பெண் வேடமிட்டு நடித்தார்.

[தொகு]பெற்ற சிறப்புகள்

  • இவருடைய ஒரு எழுதுவினைஞனின் டயறி என்ற சிறுகதைத் தொகுதி 2008 இல் வடக்கு மாகாண சிறந்த நூலுக்கான விருது மற்றும் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கும் தமிழியல் விருது ஆகியவைகளைப் பெற்றது.

[தொகு]வெளிவந்த நூல்கள்

  • ஒரு எழுதுவினைஞனின் டயறி (வர்ணா வெளியீடு - மார்ச் 2008)
  • நினைவிலிருந்து சொற்களுக்கு… (ஏப்ரல் 2012)

[தொகு]வெளியிணைப்பு

1 கருத்து: