தமிழில் இருந்து சிங்களத்திற்கு ;
Ibnu Asumath இப்னு அஸூமத்
13.
ஒரு மதியவேளைத் தளம்பலுடன்
நினைவு
கொஞ்சம் கொஞ்சமாக
நிறுத்திக் கொள்கிறது
படுக்கையிலிருந்து கதிரைக்கும்
கதிரையிலிருந்து படுக்கைக்கும்
உடல் பழகிக் கொள்கிறது
வருடங்களை எதிர்கொண்டு
விண்ணோடம் பறக்கிறது
இங்கு
நினைவுகள் பின்தள்ளப்படுகின்றன
கோயில் மணியோசை
காலையை எழுப்புகிறது
அணிஞ்சில் உதிர்த்துவிட்ட
மென்பூக்கள் சிதறியிருக்கின்றன
கூட்டிலிருந்து விடுபட்ட கோழிகள்
கரகரத்தபடி
மேய்ச்சலுக்குச் செல்கின்றன
இது மிக நல்ல சூழல்
தடுமாற்றமில்லாது
வார்த்தைகள் தெறிக்கின்றன
கடந்து கொண்டிருக்கும்
வாழ்வின் வலியையும்
போலிமுக மனிதரையும்
வேறுபடுத்தமுடியாத
வெள்ளந்திச் சிரிப்போடு
பார்த்துக் கொண்டிருக்கிறது
ஒரு முதிய குழந்தை.
ஏதோ ஒன்று
மனசைப்
பிசைந்து கொண்டிருக்கிறது.
092024
පුරුදුවීම
----------
එක්තරා දහවල් කාලය උතුරා යාමත් සමඟ
මතකය සිය ඉතිරිය ටිකෙන් ටික
නවතා දමන්නේය
සයනයෙන් පුටුවට ද
පුටුවෙන් සයනයට ද
ශරීරය හුරු පුරුදුුවේ
වසරවල් හමුවී
පියාසර කරයි අහසේ
මෙහි
මතකයන් පසු තැවිලි වේ
කෝවිලේ සීනු නාදය
උදෑසන අවදිකරයි
වීර ගස හලන ලද සියුම් මල් විිසිරී ඇත
කූඩුවෙන් නිදහස්වූ කුකුලන් කඩිමුඩියෙන්
ආහාර සොයා යමින්ය
මෙය ඉතා හොඳ පරිසරයකි
විසිවේ පැටලීමකින් තොරව වදන්
පසුකර යන ජීවිතයේ වේදනාව ද
ව්යාජ මුහුණුවලින් යුත් මිිනිස්සුන්ව ද
වෙන් කළ නොහැකි පිරිසිදු සිනාවෙන් යුතුව
බලන් සිටින මහ`ඵ දරුවෙක්
කුමක්දෝ යමක් සිත පාරන්නේය
- තුවාරගන්
- සිංහලෙන් - ඉබ්නු අසූමත්
ஒரு மனிதனைக்
கொல்லக்கூடியவை
எவையாக இருக்கலாம்?
ஓர் ஆயுதம்
ஒரு விபத்து
தீராத நோய்
இன்னமும் எவையெவையோ...
இவற்றைவிடவும்
மேலான ஒரு கொலைக்கருவி
மனிதர்களிடம் உண்டு
அதனை எங்கும் எடுத்துச் செல்லலாம்
யாரும் சந்தேகிக்க மாட்டார்கள்
ஒவ்வோர் வேளையும்
ஒரு துளி இரத்தமின்றி
ஒரு விரல்கூடத் தீண்டாமல்
கொல்லமுடியும்
ஆதியில் வார்த்தைகள் இருந்தன
அவை
மனிதர்களை வாழ வைத்தன
உன்னதர்களைத் தந்தன
இப்போது
எங்களிடமும் வார்த்தைகள் உள்ளன
அவை
ஒரு மனிதனைக்
கொல்லக்கூடிய வார்த்தைகள்
thuwarakan
ආයුදයකින්
විපතකින්
සුව නොවන රෝහයකින්
තවත් කුමක් මගින් හෝ විය හැකිය
මේවාට අමතරව උසස්ම ඝාතනය කිරීමේ ආයුදයක්
මිනිසුන් සතුව ඇත
එය කොහෙත් ගෙන යා හැකිය
කිසියම් කෙනෙකු සැක සිතන්නේ නොමැත
එක් එක් මොහොතක් පාසා
ලේ බිංදුවක් නොමැතිව
ඇඟිල්ලකින් පවා දෂ්ට නොකර
ඝාතනය කළ හැකිය
ආදි කාලයේ වදන් තිබුණේය
ඒවා මිනිසුන්ව ජීවත් කළේය
උතුම් මිනිසුන් බිහි කළේය
දැන් අප සතුව ද වදන් ඇත
ඒවා
මිනිසෙකු ඝාතනය කළ හැකි වදන්ය
- තුවාරගන්
- සිංහලෙන් - ඉබ්නු අසූමත්
11.
அந்தரத்தில் மிதத்தல்
-துவாரகன்
மமதையை,
யுகங்களாகச்
சுமந்துவந்த காலம்
இந்த மனிதர்களின் கைகளில்
சேர்த்திருக்கிறது.
கபடம் நல்ல முகமூடி
அதிகாரம் ஒரு சப்பாத்து
அதற்குத் தெரிவதெல்லாம்
பூச்சிகளும் புற்களும்தான்.
அதிகார போதையில்
வானமும் வசப்படும்
சிட்டாய்க்கூடப் பறக்கலாம்.
பறந்தாலென்ன? அளந்தாலென்ன?
நிற்பதற்கு மண்ணுக்குத்தானே
வரவேண்டும்.
மண் புதைகுழி.
தீயும்கூடத் தின்று தீர்த்துவிடும்.
சாம்பல்கூடக் கரைந்துவிடும்.
எதுவுமில்லை எதுவும்.
042024
අවකාශයේ පාවීම
-------------------
මමත්වය
යුග මෙන්
ඔසවා ගෙන ආ කාලය
මෙම මිනිසුන්ගේ දෑත්වල රැස්ව ඇත
කුහකකම හොඳ වෙස් මුහුණක්
බලය සපත්තුවකි
ඒවා දන්නේ
කෘමීන් හා තණ කොළය
බල වෙරි මතෙහි
අහස ද වසඟ වේ
කුරුල්ලන් මෙන් පියඹා යන්නට ද පු`ඵවන
පියඹා ගිය ද මැනුම් කළ ද
සිට ගන්නට ආ යුත්තේ මහ පොළවටය
පස් මිනීවළ
ගින්න පවා කා හමාර කරන්නේය
අ`ඵ පවා දියව යන්නේය
කිසිවක් නොමැත කිසිවක්
- තුවාරකන්
- සිංහලෙන් - ඉබ්නු අසූමත්
10.
சுண்டெலிகள் பெருகிவிட்டன
- துவாரகன்
இந்தச் சுண்டெலிகளுக்கு
பள்ளிகளும் இல்லை
ஆசிரியர்களும் இல்லை.
அவற்றுக்குத் தெரிந்ததெல்லாம்
கருவாட்டு வாசனையும்
தேங்காய்ச் சொட்டுக்களும்தான்.
வீட்டு முகடுகளில்
விளையாடித் திரிந்த எலிகள்
இப்போது
தரையில் இறங்கி
நடனமாடத் தொடங்கிவிட்டன.
பூனைகள்,
எலி பிடிப்பதை மறந்துவிட்டு
நடனத்தை ரசிக்கின்றன.
வேறுவழியில்லை!
இனி நாங்களும்
கைதட்டி உற்சாகப்படுத்தவேண்டும்.
இல்லையெனில்
எலிப்பொறிகளில்
எங்களை மாட்டிக் கொள்ளவேண்டும்.
26012023
හික් මීයන් පිරිහිලා
----------------------
මෙම හික් මීයන්හට
පාසැලක් ද නොමැත
ගුරුවරුන් ද නොමැත
ඔවුන් දන්නා දේ
කරවල සුවඳ ද
පොල් කැබැලි ද පමණි
ගේ මුදුන්වල
සෙල්ලම් කරමින් සිටි මීයන්
දැන් බිමට බැස
නර්තනයේ යෙදෙන්නට පටන් ගෙනය
පූසන්
මීයන් අල්ලා ගැණීම
අමතක කොට
නර්තනය රස විඳින්නේය
කළ යුත්තක් වෙනත් නොමැත
ඉතිං අපි ද
අත් පොළසන් දී
දිරිමත් කළ යුතුය
නැතහොත්
මී කතුරුවල
අපව මාට්ටු කළ යුතුවනු ඇත
- තුවාරකන්
- පරිවර්තනය - ඉබ්නු අසූමත්
9.
வெட்டுக்கிளிகளின் நூற்றியெட்டுக் கதைகள்
இன்று நீ என்ன செய்து கொண்டிருப்பாய்?
பிரமிப்பில் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டிருப்பாய்.
இனிப்புப் பலகாரங்களையும்
சில புதிய ஆடைகளையும்
வாங்கி வைத்திருப்பாய்.
பவுடர் அப்பிய முகத்துடன்
புன்னகை பூத்தபடி,
படியேறும்போது
எந்த வார்த்தையை முதலில்
பேசவேண்டுமென்று
மனப்பாடம் செய்து கொண்டிருப்பாய்.
ஆனால்,
உன்னைப் பார்த்து
நான் பரிதாபப்படுகிறேன்.
உனக்காக.
ஐந்து பகல்களும்
இரண்டு இரவுகளும்
அன்னியனின்
ஆயிரத்தெட்டு வண்ணங்களையும்
புலுனிகளின் கீச்சிடலுக்கும்
நாய்களின் குரைப்புகளுக்குமிடையே
நெருப்பில் சுட்ட
கருவாட்டு வாசனை நினைப்பில்
இதயம் கருக
ஏற்றுக்கொண்டாளே!
அது
நீ தேடிக்கொடுத்த
சுயநல இருள்.
உயர்ந்த நீர்த்தாங்கியில்
தொங்கிக் கொண்டிருக்கும் குளவிக்கூடுபோல்,
எல்லோர் கண்களிலும் துலங்குகிறது
வெட்டுக்கிளிகளின்
நூற்றியெட்டுக் கதைகள்.
நீ தேடிக் கொடுத்த
பரிசுகள் அவை.
அவளின் கட்டை
தீயில் வேகும்வரை
ஆறாதது!
14012022
vanakkamlondon.com/l
බුලත් ගිරවුන්ගේ කතා එකසිය හටක්
--------------------------------------------
අද දින නුඹ කුමක් කරමින් සිටිනු ඇද්ද?
පුදුමයෙන් යුතුව සුබ පැතුම් හුවමාරු කරමින්
සිටිනවා වෙන්න ඇති
රසකැවිලි හා සමහර අලුත් ඇඳුම් ගෙන
තියාගෙන වෙන්න ඇති
පියරු ගැල්වූ මුහුණෙන්
මද සිනාවක් නගමින්
පඩිපෙළ නගිනවිට දී
මුලින්ම කතා කළ යුත්තේ
කුමණ වචනයක් දැයි
කට පාඩම් කරමින් සිටිනු ඇති
එනමුත්
නුඹ දෙස බලා මා අනුකම්පා වෙමි
නුඹ වෙනුවෙන්
දවාල පහක් ද
රාත්රීන් දෙකක් ද
අන්යයාගේ වර්ණ එක් දහස් හටක් ද
දෙමළිච්චන්ගේ කිචිබිචි හඩ හා
සුනඛයින්ගේ බිරීම් අතරතුර ද
ගින්නෙන් දවන ලද
කරවල සුවඳ හි මතකයෙන්
හදවත කර වී
ඈ පිළිගත්තා නෙවේ ද?
එය නුඹ සොයා දුන්
ආත්මාර්ථකාමි ක`ඵවරකි
උස් ජල ටැංකියක
ඇල්ලමින් තිබෙන්නා වූ දෙබර කූඩුව මෙන්
සියල්ලන්ගේම දැස්වල ප්රකට වේ
බුලත් ගිරවුන්ගේ කතා එක සිය හට
ඒවා නුඹ සෙයා දුන්
ත්යාගයන්ය
ඇගේ ශරීරය
ගින්නේ දැවෙන තුරු
සන්සිඳෙන්නේ නොමැත
- තුවාරගන්
- පරිවර්තනය - ඉබ්නු අසූමත්
8.
அவரவர் நிலைக்கு இறங்கி வருகிறாய்
மனிதநேயம் என்கிறார்கள்
அவர்களோடு தேநீர் அருந்துகிறாய்
நட்பானவர் என்கிறார்கள்
அவர்களின் நலத்தை விசாரிக்கிறாய்
நல்ல மனிதர் என்கிறார்கள்
அநீதிக்கு எதிர்க்குரல் தருகிறாய்
நியாயமானவர் என்கிறார்கள்
ஏற்றத்தாழ்வை அகற்றக் கேட்கிறாய்
நீதிமான் என்கிறார்கள்
சந்நிதானத்தில் கண்மூடிப் பாடுகிறாய்
பக்தியானவர் என்கிறார்கள்
மரபுகளைக் கட்டியிழுக்கிறாய்
பண்பாடானவர் என்கிறார்கள்
உலக விவகாரங்களை உரத்துப் பேசுகிறாய்
அறிவாளி என்கிறார்கள்
எல்லாம் வல்லவை
கண்கள் விரிய வியக்கிறோம்.
ஒரு குரல்…
எல்லாம் எனக்குத் தெரியும்
கண்கட்டி வித்தை என்கிறது.
நீயும் வித்தைக்காரனோ?
විඡ්ඡාකරුවාගේ පසුපස සිටින්නා
---------------------------------------
ඔවුනොවුන්ගේ තත්ත්වයට ඔබ බැස එන්නේය
මානව දයාව යැයි කියති
ඔවුන් සමඟ තේ පැන් පානය කරන්නේය
මිත්රශීලිත්වය යැයි කියති
ඔවුන්ගේ සුවදුක් විමසන්නේය
යහපත් මනුශ්යයෙකු යැයි කියති
අයුක්තියට එරෙහිව හඬ නගන්නේය
යුක්ති සහගත යැයි කියති
උස් පහත්කම් ඉවත දමන මෙන් ඉල්ලන්නේය
යුක්තිගරුක තැනැත්තෙකු බව කියති
කෝවිල මූලස්ථානයේ දැස පියා භක්ති ගී ගයන්නේය
බැතිමතෙකු යැයි කියති
සම්ප්රදායන් අනුගමනය කරන්නේය
ශිෂ්ට සම්පන්න බව කියති
ලෝක කරුණු ගැන හයියෙන් කතා කරන්නේය
බුද්ධිමතෙකු යැයි කියති
සියල්ලම බලවත්ය
දැස් විවර කර පුදුමයට පත්වන්නෙමු
සියල්ල මා දනී
ඇස් බැන්දුම් විඡ්ඡාවක් යැයි
හඬක් මතුවන්නේය
- තුවාරගන්
- පරිවර්තනය - ඉබ්නු අසූමත්
7.
காலத்தின் ரேகை
- துவாரகன்
சோர்வையே அள்ளிக் தெளிக்கும் மம்மல்.
மனிதர்களின் குரலில்லாத இடைவெளியை
வானொலி நிரப்புகிறது.
காலில் உரசிக்கொண்டிருந்த பூனையும்
வாலைச் சுருட்டிக்கொண்டிருந்த கறுப்பனும்
உலாப் போய் விட்டன.
புலுனிகள் மட்டும்
நாற்சார் முற்றத்தில் குதூகலமாய்.
உணர்வைத் தொலைத்துவிட்டு
மின்மினிகளின் பின்னால்
மனிதர்களும் சென்றுவிட்டார்கள்.
இருளும் ஒளியும் ஒன்றாகிய வாழ்வில்
கண்சிமிட்டும் வெளிச்சம்
அவளைத் தேற்றப்போவதில்லை.
பேர் சொல்லி அழைக்கும்
ஒரு குரலுக்காக...
அந்தக் கணங்கள் கழிந்து கொண்டிருக்கின்றன.
அழுக்கேறிப்போன மேசையில்
வலது கையூன்றி
இருட்டை வெறித்தபடி இருக்கிறாள்.
ஒரு காலடியோசை.
அவசரத்தில்
மூக்குக் கண்ணாடியை எடுத்துப் பொருத்துகிறாள்.
கைத்தடியைத் தேடி எடுக்கிறாள்.
தனிமை...
அவள் காலடியில் சுருண்டு கிடக்க,
காலம்,
தன் ரேகைகளை
அள்ளித் தெளித்துவிட்டுச்
சென்று கொண்டேயிருக்கிறது.
02/2022
කාලයේ රේඛාව
------------------
වෙහෙස අහුරා ඉසන වැහි බීරුමයකි
මිනිස් හඬ නොමැති පරතරය
කකුලේ අතුල්ලමින් සිටි බළලා ද
වලිගය අකුලමින් සිටි සුනඛයා ද
රවුමක් ගිහින්ය
දෙමළිච්චන් පමණක්
චතුරශ්ර මිදුලේ කුතුහලයෙන්
හැඟීම් නැති කර ගත් කලාමැදිරියන් පසුපස
මිනිස්සුන්ද ගිහින්ය
ක`ඵවර හා ආලෝකය එක්වූ ජීවිතයෙහි
ඇස් පිය ගසන එළිය
ඇයව සනසන්නේ නොමැත
නම කියා කැඳවන
හඬක් වෙනුවෙන් එම මොහොත
ගෙවී යමින්ය
අපිරිසිදු මේසය මත
දකුණු අත තබා ඈ
ක`ඵවර දෙස කුලෑටිව බලමින්ය
අදිසියෙන් ඇස් කණ්ණාඩිය ගෙන පලදින්නේය
සැරසටිය සොයාගන්නේය
හුදකලාව
ඇගේ පාද යට ඇකිළී තිබෙන්නට
කාලය තම රේඛාවන් අහුරා ඉසමින් යමින්ය
සිය පාඩුවේ
තුවාරකන්
පරිවර්තනය - ඉබ්නු අසූමත්
5.
பாரமாகும் கற்கள் | துவாரகன்
வீதிகளிலும் வரிசைகளிலும் விசாரிப்புகளிலும்
உணர்வும் உடலும்
கரைந்து கொண்டிருக்கிறன.
மண்வெட்டியைச் சாய்த்துவிட்டு அன்றைய நாட்கூலியை
பிரித்துப் பார்க்கிறான்
களைப்பு நீங்காத உழைப்பாளி.
துலாக்கோல் கல்லாய்
அழுத்திக் கொண்டிருக்கும்
வாழ்வின் சுமையை
மடியில் சுருட்டிய தாள்கள்
ஏளனம் செய்கின்றன.
உயிர்க்கயிற்றை
கொஞ்சம் கொஞ்சமாய்
இழுத்துக் கொண்டிருக்கிறோம்.
அள்ளவே முடியாத
ஆழத்திற்கு
சென்றுகொண்டிருக்கிறது விடாய்தீர்க்கும் மருந்து.
26062022
vanakkamlondon.com
බරවී ගිය ගල්
----------------
වීදිවල පෝලිම්වල විමසීම්වල
හැඟීම් ද ශරීරය ද
දියවෙමින්ය
උදැල්ල හේත්තු කර එදින දෛනික වැටුප
දිගු හැර බලන්නේය
මහන්සිය නොහැරුණු කම්කරුවා
ආඩි කඳ ගල් මෙන්
තද කරමින් තිබෙන්නාවු
ජීවිතයේ බර
ඔඩොක්කුවේ ගුලි කළ නෝට්ටු
පරිහාසය කරති
පණහි ළණුව
කෙමෙන් කෙමෙන් අදිමින් සිටින්නෙමු
ගන්නට නොහැකි ගැඹුරට
යමින්ය පිපාසය සංසිඳෙන බෙහෙත
තුවාරගන්
පරිවර්තනය - ඉබ්නු අසූමත්
4.
உறைந்துபோன கண்கள்
- துவாரகன் -
சொற்கள் செத்துப்போன கணங்களில்
கைகளும் கால்களும் உறைந்தன.
கண்கள் உயிரின் பாஷைகளாயின.
வெளிச்சத்தில் குறுகவும்
அதிசயத்தில் விரியவும்
பழக்கப்பட்ட கண்கள் அவை
பெருமரத்தின் கீற்றுத் துண்டுகள்
உயிர்கொண்ட கணத்தில்...
மண்ணும் கல்லும் சாந்தும்
குழைத்தெழுந்த சுவர்களுக்கு
ஈரத்தோடு உயிர்பிறந்தபோது,
மனிதர்களுக்காக கண்கள் பேசத் தொடங்கின.
எத்தனை ஜோடிக்கண்கள் பேசின
எத்தனை ஜோடிக் கண்கள் துடித்தன
எத்தனை ஜோடிக்கண்கள் இரந்தன
எத்தனை ஜோடிக் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தன.
வாழத்துடிக்கும் ஆசை அந்தக் கண்களில் இருந்தது.
கருணையை கையேந்தி இரந்துகொண்டே
பலிபீடத்தில் வெட்டுண்டு கிடக்கும்
ஆட்டின் குருதியென உறைந்திருந்தன.
சுருட்டுப்புகையோடு
ஆறுதலாய்க் கதைபேசிச் செல்லும்
'சொக்கன்அண்ணா'
ஒருநாள் மாலைக்கருக்கலில்
பனையால் விழுந்து செத்துக் கிடந்தபோது
கண்கள் மட்டும்
விழிந்தபடியே உறைந்திருந்தன.
சொற்கள் செத்துப்போன கணங்கள் அவை.
குப்பையில் தூக்கிவீசப்பட்ட
ஒரு பொம்மையைப் போலவே!
04/2012
பதிவுகள். கொம்
(4)
ගල් වී ගිය කඳු`ඵ
--------------------
වදන් මිය ගිය අවස්ථාවක
දැත් ද දෙපා ද ගල් ගැසීය
ආලෝකයේ දී කෙටි වීමට ද
ආශ්චර්යේ දී විශාල වීමට ද
පුරුදු වූ දැස්ය
රූස්ස ගහක තීරු
ජීවමාන වූ අවස්ථාවක
පස ද ගල් ද බදාම ද
මිශ්ර වී නැගුණු බිත්තිවලට
තෙතමනය සමඟ ජීවය ලැබුණු විට දී
මිනිස්සුන් වෙනුවෙන් දැස් කතා කරන්නට විය
කෙතරම් ජෝඩු දැස් කතා කළා ද
කෙතරම් ජෝඩු දැස් ගැහුණේ ද
කෙතරම් ජෝඩු දැස් කරුණාවන්ත වූවා ද
කෙතරම් ජෝඩු දැස් බලන් හිටියා ද
ජීවත් වීමට අයත් ආශාව එම දැස්වල තිබුණි
කරුණාව අත ගෙන යාචකයේ යෙදෙමින්ම
අල්තාරයේ කැබිලි ව තිබෙන්නාවූ
එ`ඵවාගේ රුධිරය මෙන් ගල් වී තිබුණි
සුරුට්ටු දුම් සමඟ
සැනසුම් සහගතව කතා කර යන
සොක්කන් අයියා
දවසක් දා සවස් වරුවේ
ගොම්මන් වේලාවක
තල් ගසෙන් වැටී මිය ගොස් සිටි විට
දැස් පමණක් විවෘත්ත ව ගල් ගැසී තිබුණි
වදන් මිය ගිය අවස්ථාවකි එය
කුණු කූඩයට වීසි කළ
බෝනික්කෙක් මෙන්
තුවාරගන්
පරිවර්තනය - ඉබ්නු අසූත්
3.
புதிய மூன்று சிலுவைகள்துவாரகன்
பொய்யருக்கும்
காமுகருக்கும்
சட்டவிரோதிகளுக்கும்
இந்த அழகிய வெளி
திறக்கப்பட்டிருக்கிறது.
மூலையில் பதுங்கியிருக்கும்
உண்மையை
சவுக்கால் அடியுங்கள்.
ஒழுக்கத்திற்கு முட்கிரீடம்
சூட்டுங்கள்.
நேர்மைக்கு நஞ்சுகொடுத்து
சாவடியுங்கள்.
மீளவும் உயிர்க்காதபடி
மூன்று சிலுவைகளிலும்
முந்நூறு ஆணிகொண்டு
அறையுங்கள்.
நாங்கள் எல்லோரும்
பொய்யரைப் போற்றுவோம்.
நாங்கள் எல்லோரும்
காமுகரைக் கொண்டாடுவோம்.
நாங்கள் எல்லோரும்
சட்டவிரோதிகளுக்குப்
பன்னீர் தெளிப்போம்.
04012022
vanakkamlondon.com
නව කුරුස තුනක්
---------------------
ව්යාජිකයින්හට ද
කාමුකයින්හට ද
නීති
විරෝදි ක්
රියාකාරින්හට ද
මෙම ලස්සන එළිමහන
විවෘත්ත වී ඇත.
මුල්ලක සැඟව සිටින
සත්යට කස පහර දෙන්න
ගුණධර්මයට
කටු ඔටුනු පළඳවන්න
නැවත ජීවමාන නොවන පරිදි
කුරුස තුනෙහිම
තුන්සීයක් ඇණ ගෙන ගසන්න
අප සිල්ලන්ම
බොරුව අගය කරමු
අප සියල්ලන්ම
කාමුකයින්ව සමරමු
අප සියල්ලන්ම
නීති විරෝධි ක්රියාකාරින්ට
පිනි දිය ඉසිමු.
තුවාරකන්
පරිවර්තනය - ඉබ්නු අසූමත්