நவம்பர் 05, 2025

'மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்' நிகழ்வில்

 யா /பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலத்தில் நூலக வாரத்தையொட்டிய (31.10.2025) 'மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்' நிகழ்வில் பங்குபற்றியபோது.


பாடசாலையின் முகநூற்பதிவிலிருந்து....

"யா/வேலாயுதம் மகாவித்தியாலயத்தில் 31.10.2025 வெள்ளிக்கிழமை வாசிப்பு மாதத்தைச் சிறப்பிக்குமுகமாக புத்தகக் கண்காட்சியும் மாணவர்களது சஞ்சிகை ஆக்க வெளியீடும் இடம்பெற்றன.இந் நிகழ்வானது பாடசாலை அதிபர் திரு திருப்பரங்கிரிநாதன் செந்தில்நாதன் தலைமையில் இடம்பெற்றது.பிரதம விருந்தினராக கலாநிதி சுப்பிரமணியம் குணேஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.இவர் யா/சிதம்பராக் கல்லூரியின் சிறந்த தமிழ் ஆசிரியரும் சிறந்த எழுத்தாளரும் கவிஞரும் ஆவார்.இந் நிகழ்வில் பொது அறிவு வினாடிவினா போட்டி, கவிதை,பேச்சு, குறுநாடகம் ,பிரதம விருந்தினருடனான நேர் காணல்,நூலக வார போட்டி நிகழ்வுகளுக்கான பரிசில் வழங்கல் என ஒழுங்கமைக்கப்பட்டி ருந்தன நூலகப் பொறுப்பாசிரியர் திருமதி தர்ஷினி மணிக்குமார் நிகழ்வுகளை ஒழுங்கமைத்திருந்தார்.அவரின் நன்றிகூறலுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.இந்நிகழ்வானது இவ்வருடத்திற்கான வாசிப்பு மாதத் தொனிப் பொருளான மறுமலர்ச்சிக்காக வாசிப்போம் என்பதனை மையமாகக் கொண்ட மைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது."